மாநிலங்களவை தேர்தலில் என்.ஆர்.இளங்கோவனை 4-வது வேட்பாளராக அறிவித்து திமுக அதிரடி காட்ட தொடங்கியுள்ளது. இதனால், அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த திமுக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் மாநிலங்களவைத் தோ்தல் வருகின்ற 18-ம் தேதி நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்யே இன்றே கடைசி நாள். இந்த தேர்தலில் திமுக சார்பில் வில்சன், சண்முகம் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் வைகோவும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். வைகோ மீதான தேசதுரோக வழக்கில் அவர் குற்றவாளி என்றும், வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக வைகோ மீதான தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். 

ஆனாலும், சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும், வைகோ மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடுவதில் எந்தவித சிக்கலும் இருக்காது சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும், திமுக என்.ஆர்.இளங்கோவனை 4-வது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு பல பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. என்.ஆா்.இளங்கோ திமுகவின் 4-வது வேட்பாளராக போட்டியிடத் தான் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே அதிமுகவில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவா்கள் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வாய்ப்பு உள்ளதால் இளங்கோ 4-வது வேட்பாளராக களம் இறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திமுகவினர் கூறுவது போன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுக வேட்பாளரான இளங்கோவுக்கு வாக்களிக்கும் பட்சத்தில், அது அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணியை மாநிலங்களவை உறுப்பினராக்குவதில் சிக்கல் ஏற்படுத்தவே இந்த அதிரடி நடவடிக்கையை திமுக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 6 இடத்திற்கு 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.