பல வருடங்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா..? மாட்டாரா..? என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த போது, திடீர் என 'ஆன்மீக அரசியலில்' குதிக்கப்போவதாக கூறி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இதற்கு முதல் கட்டமாக ரஜினி மக்கள் மன்றம் மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரம் அடைந்தது. மேலும் ரஜினி மக்கள் மன்றத்திற்கான மாவட்ட நிர்வாகிகள் தேர்வு, உறுப்பினர்களை சேர்ப்பது என அரசியல் வேலைகள் தீவிரமடைந்தது. 

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்திற்கான மாநில செயலாளராக ராஜூ மகாலிங்கத்தை ரஜினிகாந்த் நியமித்தார்.

ராஜூ மகாலிங்கத்தை  ரஜினி மக்கள் மன்றத்திற்கான மாநில செயலாளராக நியமித்தது குறித்து ரஜினி தரப்பில் இருந்து கூறப்பட்டது என்னவென்றால். ராஜூ மகாலிங்கத்தின் திறமையும் திட்டமிடலையும் பயன்படுத்திக்கொள்ள ரஜினிகாந்த் விரும்பியதால், இவரை மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகியாக நியமனம் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

வேலூர், நெல்லை, தூத்துக்குடி என ஓவ்வொரு மாவட்ட நிர்வாகிகளின் நியமனத்திலும் ராஜூ மகாலிங்கத்தின் பங்களிப்பு அதிகமாக இருந்த பட்சத்தில் தற்போது ரஜினியின் கட்சியில் இருந்து திடீர் என 'ராஜூ மகாலிங்கம்' கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியானது.

இந்த தகவல், வதந்தி என ரஜினி மக்கள் மாற தலைமையில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.