பாஜகவின் நதிகள் இணைப்பு குறித்த தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் வரவேற்றது நல்லது என அக்கட்சியின் மாநிலத் தலைவரும், தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். 

பாஜகவின் நதிகள் இணைப்பு குறித்த தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் வரவேற்றது நல்லது என அக்கட்சியின் மாநிலத் தலைவரும், தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். 

தண்ணீர் பிரச்னைகளை தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என தெரிவித்து இருந்த ரஜினி, இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ‘தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவில் உள்ள நதிகளை இணைத்து விட்டாலே நாட்டில் பாதி வறுமை ஒழியும். நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் என பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நதிகள் இணைப்பு குறித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் பேசியிருக்கிறேன் அவர் அவர் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் தூத்துக்குடியில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ’’நதிகள் இணைப்பு குறித்த பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் வரவேற்றது நல்லது. நதிகள் இணைப்பு என்பது நீண்டகால திட்டம். ஏற்கெனவே ரஜினிகாந்த் நதிகள் இணைப்புக்காக ஒரு கோடி தரத் தயாராக அறிவித்துள்ளார். இது உண்மையிலேயே உலகத்துக்கே சோறு போடக்கூடிய ஒரு திட்டம்’ என அவர் பாராட்டியுள்ளார். 

நேற்று, பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார் என்று தமிழிசை ரஜினிகாந்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இந்நிலையில் அவர் பாராட்டியிருந்த மறுநாளே பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினி பாராட்டியுள்ளார்.