Rajinikanth will meet his fans again in two months

இப்ப வருவார் அப்ப வருவார் என இருபது வருடங்களுக்கு மேலாக ரஜினி அரசியலுக்கு வருவாரென காத்திருந்து கண்கள் பூத்து போனதுதான் ரஜினி ரசிகர்களுக்கு மிச்சம்.

ஒவ்வொருமுறையும் தான் நடித்த சினிமா வெளிவருவதற்கு முன்பாக அரசியல் தொடர்பாக ஒரு ஸ்டன்ட் அடிப்பது ரஜினிகாந்தின் வாடிக்கை.

இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் காலா எனும் புதிய திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

மும்பையில் கடந்த இரண்டு வார காலமாக இந்த படபிடிப்பு நடைபெற்று வந்தது. முதல் கட்ட படபிடிப்பை மும்பையில் முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தாம் மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்

அதாவது இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் தனது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தனது தொண்டர்களை சந்திக்க போவதாக ரஜினி மீண்டும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு ஜூலை 15 அல்லது ஆகஸ்ட் 15 யில் வெளியாகலாம் என தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில். தொண்டர்களை சந்திக்க போவதாக ரஜினி அறிவித்திருப்பதன் மூலம் நேரடி அரசியலுக்கு ரஜினி வருவது நிச்சயமென மார்தட்டிகொள்கின்றனர் அவரது ரசிகர்கள்.