Asianet News TamilAsianet News Tamil

போலீசாரை அடித்தவரை கடுமையா தண்டிக்கணும்... இல்லன்னா நாட்டுக்கே பேராபத்து! கொந்தளிக்கும் ரஜினி  

rajinikanth Twitter voice against Protester
rajinikanth Twitter voice against Protester
Author
First Published Apr 11, 2018, 9:59 AM IST


வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து என நடிகர் ரஜினிகாந்த் கொந்தளித்துள்ளார்.

காவிரி நதிநீர் உரிமையை வென்றடுக்கும் வரை கேளிக்கைகள் வேண்டாம் என்ற முழக்கங்களுடன் ஐபிஎல் போட்டிக்கு எதிராக நேற்று சென்னை அண்ணாசாலை, வாலாஜா சாலை சேப்பாக்கம் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கனோர் சென்னையையே அதிர வைத்தனர்.

காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினா் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழக விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத மத்திய அரசுக்கு தங்கள்  எதிர்பார்ப்பை வெளிப்படுத்த இளைஞா்கள் ஐ.பி.எல். போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினா் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் கிரிக்கெட் வாரியம் அதை கண்டுகொள்ளாமல் காவல்துறையை இறக்கி இந்த போட்டியை நடத்தியது.

இந்நிலையில், நேற்று காலை இயக்குனர் பாரதியாஜா அறிவித்தது போல, பாரதிராஜா தலைமையில் சீமான் மற்றும் சினிமா இயக்குநர்கள் ஏராளமானோர் அண்ணாசாலையில் குவிந்தனர்.

அங்கு தமிழ்நாட்டுக்கான தனி கொடி ஏந்தி அண்ணாசாலையில் போராட்டம் வெடித்துள்ளதால், ஹோட்டல் அறையிலேயே கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டு மைதானத்துக்கு அழைத்து வர பல்வேறு சிரமப்பட்டனர். நொடிக்கு நொடி அண்ணாசாலை, வாலஜா சாலை, சேப்பாக்கம் பகுதிகளில்  ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

ஸ்டேடியத்தை சுற்றி நாலாப் பக்கமும் கூட்டம்  கூட்டமாய் ஸ்டேடியத்தை நோக்கி படையெடுத்ததால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறினர்.

இதனையடுத்து போராட்டத்தின் போது நாம் தமிழர் கட்சியினர் போலீசாரின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு  மைதானத்தை நோக்கி முன்னேறினர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதை தடுத்தனர். உடனே, ஆத்திரம் அடைந்த நாம்  தமிழர் கட்சினர் திடீரென தலைமை காவலர் ஒருவரை செம்ம குத்து விட்டு கீழே தள்ளினார். இதை தடுக்க வந்த மற்றொரு தலைமை காவலரையும், மற்றுமொரு ஆயுதப்படை  காவலருக்கும் அடி உதை விழுந்தது.

இந்நிலையில் தந்து ட்விட்டர் பக்கத்தில், வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும் என இவ்வாறு தனது பதிவில் கூறியிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios