கட்சி ஆரம்பிக்கும் முன்பே மாவட்டச் செயலாளர்களை மாற்றி அதிரடிக்குத் தயாராகி வருகிறார் ரஜினிகாந்த். 

ரஜினி கட்சி துவங்குகிற வேலையில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக சில வேலைகளை செய்யச் சொல்லி, மாவட்ட செயலாளர்களுக்கு, ஒரு வருஷத்துக்கு முன்பே  உத்தரவு போட்டு இருந்தார். ஆனால், கிளைகளை துவங்குவதில், பல மாவட்ட செயலாளர்கள் அக்கறை காட்டவில்லை. சமீபத்தில் நடந்த, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் இது தெரிய வந்துள்ளது. இதனால், ரஜினி 'அப்செட்' ஆகி இருக்கிறார். 

சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களிடம் விளக்கம் கேட்கச் சொல்லி, மக்கள் மன்ற தலைவரிடம், ரஜினி கூறி இருக்கிறார். விளக்கம் சரியாக இல்லை என்றால் அவர்களது பதவிகளை பறிக்கவும் சொல்லி இருக்கிறார். இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், கோவை உட்பட, 10க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.