பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நண்பர் கமலுக்கும் மற்றும் ஸ்டாலினுக்கும் ரஜினிகாந்த் நன்றி சொல்லி ட்வீட் போட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 69வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.
ரஜினியின் ஒவ்வொரு பிறந்த நாளின்போது தவறாமல் வாழ்த்து கூறும் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவராகிய கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்' என்று கூறியுள்ளார்.
அதேபோல, திமுக தலைவர் முக ஸ்டாலினும் தனது ட்விட்டரில்; திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்! நலமுடன்! வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.
இதற்க்கு ரிப்லை கொடுத்த ரஜினி, வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தளபதி அவர்களே.
உங்கள் நண்பன்,
ரஜினிகாந்த் என ஸ்டாலினும்க்கும்,
நன்றி கமல்
என்றென்றும்,
உங்கள் ரஜினி என ஷாட் ஷார்ப் ரிப்லை தட்டியிருக்கிறார்.
