நடிகர் ரஜினிகாந்த் மோடி பதவியேற்பு விழாவிற்கு புறப்பட்டுச் சென்ற நிலையில் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்து விட்டார்.

 

நேற்று முன்தினம் போயஸ் கார்டனில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி மக்களை ஈர்க்கும் தலைவர் என்றும் பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடி எனும் ஒரே தலைவர் தான் காரணம் என்றும் புகழ்ந்து தள்ளினார் ரஜினி. ஆனால் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை நிலவியதாக ரஜினி கூறியது பாஜகவினரை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்தது. மோடி எதிர்ப்பு அலை என்று கூறாமல் பாஜக எதிர்ப்பு அலை என்று கூறியிருந்தால் கூட அக்கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து இருக்க மாட்டார்கள். 

ஆனால் மோடியின் இமேஜை தமிழகத்தில் மேலும் டேமேஜ் செய்யும் வகையில் ரஜினி பேசியது அவரது மனைவியும் போயஸ் கார்டன் கிச்சன் கேபினட்டுமான லதாவையும் வருத்தமடைய செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மோடி ஆட்சி அமைக்கும் நிலைகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு அமைதியாக இருப்பதை விட்டுவிட்டு இதற்காக தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை என்று கூறி ஒரு பரபரப்பை உருவாக்க வேண்டும் என்று லதா கருதியுள்ளார். 

இதனை வெளிப்படையாக ரஜினியிடமும் கூறியுள்ளார். பாஜகவில் இருந்து பலர் தங்களுடன் நெருக்கமாக இருக்கும் நிலையில் இதற்காக மோடியை நாம் விமர்சிக்க வேண்டும் என்றும் லதா ரஜினியிடம் கேட்டதாக சொல்கிறார்கள். இப்படி எல்லாம் ரஜினியிடம் லதா கேட்கவில்லை என்றும், சிலர் கேட்க வைத்துள்ளனர் என்றும் பேச்சு அடிபடுகிறது. இதன் காரணமாகவே மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கும் பட்சத்தில் மோடி எதிர்ப்பு அலை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டால் தேவையற்ற தர்ம சங்கடத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் தான் ரஜினி செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்கிறார்கள்.