காமெடி நடிகர் வடிவேலு கடந்த மாதம் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்தவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.வேறு வழியில்லாமல் வடிவேலும் பேட்டியளித்தார். அந்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூட்டை கிளப்பியது.
யாருவேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.ஏன் நான் கூட முதலமைச்சராக வரலாம் என்று காமெடியாக பேட்டியளித்தார்.

"நான் திருச்செந்தூர்ல சாமி கும்பிட்டுட்டு வெளியே வரும்போது என்கிட்ட மைக்கை நீட்டி `ரஜினி அரசியலுக்கு வந்தா நான் கட்சியைப் பார்த்துப்பேன். முதலமைச்சரா வேறு ஒருத்தரை வைக்க போறேன்று சொல்றாரே’னு கேள்வி கேட்டாங்க.அதற்கு பதிலளித்த வடிவேலு..'அப்போ `ரஜினிசார் சொல்றது சரிதானே யாருக்கு அந்த மனசு வரும்.

அவரை பாராட்டுறேன். அவர் சொன்னதை வரவேற்குறேன்"னு சொல்லிட்டு நான் பாட்டுக்கு மதுரைக்கு வந்துட்டேன். திடீர்னு ஒரு நாள் போன்... `என்ன வடிவேலு எப்படி இருக்கீங்க?’ன்னு ரஜினி சார்க்கிட்ட இருந்து போன் வந்தது. நான் ஆடிப்போயிட்டேன். நான் நல்லா இருக்கேன்.பதிலுக்கு நீங்க எப்படி இருக்கீங்கனு கேட்குறது தானே நம்ம கலாச்சாரம். நானும் 'நீங்க எப்படி இருக்கிங்க சார்னு கேட்டேன். நல்லா இருக்கேனு சொன்னவர்.ரொம்ப நல்லா திருச்செந்தூர்ல பேசுனீங்க'னு பாராட்டினார். அதுக்கப்புறம் ரெண்டுபேரும் கொஞ்ச நேரம் மனம்விட்டு  பல விசயங்களை பேசிக்கிட்டு  இருந்தோம் என்று கூறியிருக்கிறார்.