ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இனி போஸ்டர், பேனர், பதாகை வைக்க ரஜினிகாந்த் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளார். தலைமை மன்றத்துக்கு அனுப்பி அனுமதி எண் பெற்ற பிறகே போஸ்டர், பேனர்களை வைக்க வேண்டும் என கூறி, புதிய சிஸ்டத்தை கொண்டு வந்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், மக்கள் அவருக்கு எந்த அளவிற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்கிற சந்தேகம் அனைவர் மத்தியிலும் இருக்கிறது. எனினும் ஒரு பிரபல நட்சத்திரம் என்பதால் அவரது வருகை தமிழக அரசியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்கிற கருத்தும் உலாவி வந்தது.

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த பின், கட்சியின் கட்டமைப்பில் பெரிதாக எந்த கவனமும் செலுத்தாமல்,  தன்னுடைய படவேளைகளில் ஆர்வம் காட்டி வந்தார். இது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

மேலும் ரஜினிகாந்த், தொண்டர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட போது தமிழ் நாட்டில் சிஸ்டம் சரி இல்லை என்று ஒரு கருத்தை பதிவு செய்தார். இவரின் இந்த வார்த்தையை சிலர் ஏற்றுக்கொண்டாலும், சிலர் விமர்சித்தும் வந்தனர். ஒரு சில அரசியல் கட்சியினர் இவர் புதிய சிஸ்டத்தை கொண்டு வரட்டும் என கிண்டல் கூட செய்தனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் இப்படி கூறியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன்னுடைய அரசியல் கட்சியில் உள்ள நிர்வாகிகளுக்கு புதிய சிஸ்டத்தை கொண்டு வந்துள்ளார் ரஜினிகாந்த். இதில் போஸ்டர், பேனர், பதாகை வைக்க ரஜினிகாந்த் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளார். தலைமை மன்றத்துக்கு அனுப்பி அனுமதி எண் பெற்ற பிறகே போஸ்டர், பேனர்களை வைக்க வேண்டும் என புதிய சிஸ்ட்டத்தை கொண்டு வந்துள்ளார்.