கமலும், ரஜினியும் ’அதுக்காக’ ஒண்ணு சேரலையாமே! எல்லாத்தையும் பேசி முடிவு பண்ணிட்டாங்களாம்: முட்டுக் கொடுக்கும் முக்கிய நிர்வாகிகள்

கடந்த ஒரு வாரமாக டிரெண்டிங்கில் இருக்கிறது ‘தேவைப்பட்டால் நானும், அவரும் அரசியலில் இணைந்து செயல்பட தயங்க மாட்டோம்’ என்று ரஜினியும், கமலும் தனித்தனியாக சொன்ன ஒரே அதிரடி தகவல்.


 
சென்சிடீவ் டாபிக் கிடைக்காதா?! என்று  காதை விரித்துக் காத்துக் கொண்டிருந்த சேனல்களும், கட்சிகளின் மீடியா பங்கேற்பாளர்களும் கடந்த நான்கைந்து நாட்களாக இதைத்தான்  வெச்சு செய்து கொண்டிருக்கின்றனர் மீடியாக்களில். 

இவர்கள் இருவரும் இணைந்து நின்றால், நம்ம பிழைப்புக்கு ஆப்பு! ஆகிடுமே என்று அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டுமே இணைந்து இந்த இணைப்பு எந்த காலத்திலும் நடந்துவிடாதபடி துண்டிப்பதற்கான வேலைகளில் முழு மூச்சாக இருக்கின்றன. அதற்காக ரஜினி, கமல் இருவரின் தரப்பிலும் சில இன்ஸ்டண்ட் ஸ்லீப்பர் செல்களை தங்கள் சார்பில் இறக்கிவிட்டு....

“இணைந்து நிற்பார்கள் தப்பில்லை. ஆனால் முதல்வரென்னவோ எங்கள் தலைவர்தான்” என்று இரு தரப்பிலும் ஒரு ஆளை ஓவராக கூவ வைத்துள்ளனர். இதனால்  எழுந்த ஈகோ யுத்தத்தின் விளைவாக சினிமா நண்பர்கள் இருவரும் அரசியல் எதிரிகளாக உருவாகிவிடுவார்களோ என்று டவுட்டுமளவுக்கு சூழல் உக்கிரமெடுத்து நிற்கிறது. 

இந்த நிலையில், ‘இணைந்த அரசியல்’ என்று சொல்லி அதன் பின் அடியோ அடி பட்டு, படுகாயமடைந்து பஞ்சரான உடம்புக்கு டிஞ்சர் போடும் மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளரான முரளி அபாஸ் “இருவருக்குள்ளும் எந்த பிரச்னையும் இப்பவும் இல்லை, எப்பவும் இருக்காது. ரஜினியும், கமலும் சினிமாவில் உச்சம் தொட்டவர்கள். பிரதமரே எழுந்து வரவேற்குமளவுக்கு இருவரும் புகழின் உச்சாணியில் இருப்பவர்கள். அதனால் இருவருக்குமே முதல்வர் பதவி என்பது பெரிதல்ல. 

கமல் பகுத்தறிவாதி, ரஜினி ஆன்மிகவாதி அதனால் இருவருக்கும் சேராது! என்று சிலர் சில பிரிவினைகளை புகுத்துகிறார்கள். இந்த பிரிவினையெல்லாம் இங்கே எடுபடாது. இரு தலைவர்களின் உள்ளம் என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப நடந்து கொள்ளவும், அவர்களின் எண்ணங்களுக்கு பங்கம் வராமல் இருந்து கொள்ளவும் ரசிகர்களும், தொண்டர்களும் தயார். 

மேலும், முதல்வர் ஆக வேண்டும்! என்பதற்காக இருவரும் அரசியலுக்கு வரவில்லை. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், மாற்றம் வேண்டும் என நினைக்கிறார்கள் இருவரும். 

முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட எல்லாவற்றையும்  இருவரும் பேசி இந்நேரம் முடிவெடுத்திருப்பார்கள். அதனால்தான் ‘தேவைப்பட்டால் ‘ எனும் வார்த்தையை கவனமாக பிரயோகித்து இருக்கிறார்கள்.
தலைவர்கள் ரெண்டு பேரும், தொண்டர்களும் தெளிவாதான் இருக்கோம் பாஸ்.” என்கிறார். 
அப்ப, மக்கள்தான்...