தர்பார் படப் வேலைகளை மொத்தமாக முடித்துவிட்ட ரஜினி , சில நாட்களாக சென்னையில் போயஸ் கார்டன் வீட்டில் கட்சி வேலையை சைலண்ட்டாக தொடங்கியுள்ளாராம். அதேபோல பல கட்சிகளில் ஓரங்கட்டப்பட்டு, கோஷ்டி பூசலால் வெளியேற்றப்பட்ட முக்கிய புள்ளிகளையும் சந்தித்து பேசி வருகிறாராம்.

முதல்கட்டமாக கட்சிக் வேலையெல்லாம் முழுதாக முடிச்சாச்சா...? நிர்வாகிகள் பிரச்சினையெல்லாம் எப்படி இருக்கு,.. உறுப்பினர் சேர்க்கை எவ்வளவு எப்படி போயிட்ருக்கு?  என முக்கியமான சிலரை அழைத்து பேசியிருக்கிறாராம். அடுத்தவருஷம் முழுசா  பாலிடிக்ஸுக்குள்ள வரப் இறங்குறோம். அதுக்கு இப்பவே எல்லாரும் தயாரா இருக்கணும். நாம என்ட்ரிய பார்க்கும் மத்தவங்க கலங்கிப்போகணும், இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும் நம்மல திரும்பி பார்க்க வைக்கணும், முதல் மாநாடு தமிழகத்தின் மத்திய நகரமான மலைக்கோட்டை திருச்சியில, இல்ல மதுரைல இதுல ஏதாவது ஒரு இடத்துல நடத்தணும் அப்போதான் தமிழகத்துல இருக்குற மக்களை ஒரே இடத்துல கூட்ட முடியும், வரும் 2020 ஜூலைக்குள்ள நாம மாநாடு நடத்தியாகணும். அதுக்கான வேலைகய இப்பவே ஆரம்பிக்க சொல்லுங்க என சொல்லியிருக்கிறார் ரஜினி.  

ரஜினியின் சொன்னதுமே, மதுரை, திருச்சி ஆகிய இரு இடங்களிலும் நிலம் தேடும் பணிகளில் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் இறங்கிவிட்டனர். ஏற்கெனவே ரஜினி அங்கே மாநாடு நடத்த போறாரு என சொன்னதெல்லாம் வெறும் கதை, இதுவரை மாநாடு சம்பந்தமாக இப்போதுதான் .  இப்போதுதான் பேசியுள்ளாராம். 

ரஜினியின் இந்த முதல் பிரமாண்ட அரசியல் மாநாட்டில் பல கட்சிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்களும், கோஷ்டி பூசலால் வெளியேற்றப்பட்டவர்களும், அரசியலில் போனியே  ஆகாத சில முக்கிய புள்ளிகளும் மாநாடு நடக்கும்போதே ரஜினி கட்சியில் சேர இப்போதே புக் செய்கிறார்களாம், அவர்களும் தங்களை மாஸாக காட்டிக்கொள்ள தங்கள் பங்கிற்கு பணத்தை இறக்கி கூட்டம் கூட்டுவார்கள் என சொல்லப்படுகிறது.