ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததற்கு பின் மூன்று படங்கள் வெளியாகிவிட்டது, அடுத்ததாக ஒரு டஜன் படம் நடிக்கவுள்ளதாக லிஸ்ட் வேறு வெளியாகியுள்ளது. இப்படி படங்கள் நடித்துக்கொண்டிருக்கும்போதே, அரசியல், பொது விழாக்களில் பங்கேற்று வருகிறார்.

தற்போது தர்பார் படத்தை முடித்துள்ள ரஜினி, அடுத்த பட ஷூட்டிங்கிற்கு செல்வதற்கு முன்பாக, தனது கட்சி சம்பந்தமாக அனைத்து வேலைகளையும் ஆரம்பித்துள்ளார். ரஜினியின் அரசியல் என்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷமாக இருந்தாலும், மறுபக்கம் எதிர்க்கட்சியினர் கடுப்பில் உள்ளனர். அடுத்ததாக இன்னொரு பக்கம் தாவாமல் இருக்க , பிஜேபிஇடமிருந்து எஸ்கேப் ஆக அடுத்தடுத்து தனது அரசியல் சம்பந்தமாக பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

என்னதான் ரஜினி பிஜேபியில் சேரவில்லை என்றாலும், பிஜேபியிலிருந்து  ஒருபக்கம் அழுத்தம் இருப்பதை அவரால் மறுக்கமுடிவதில்லை, தன்னை சந்தித்தவர்களிடம் தமிழகத்தில் கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்கு சதவிகிதம் பற்றியும், அதைத் தக்கவைக்க ஸ்டாலின் ரகசிய முயற்சிகளையும் பற்றி பேசியிருக்கிறார். தான் ஆன்மிக அரசியல் என்று பேசிவருவதால் தனக்கிருக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ ரசிகர்களைக்கூட தனக்கு எதிராகத் திருப்பும் வேலைகளை ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளதாக சந்தேகப்படுகிறார் ரஜினி. 

இதற்காகவே தன்னை பிஜேபியின் ஆள் என்று சித்திரிக்க முயற்சி செய்வதாகவும் ரஜினி நினைக்கிறாராம், ‘என்னை பிஜேபி ஆள்னு சொல்றாங்க. ஆனா, தேர்தல் ரிசல்ட்ல காங்கிரஸ் தோற்றதால ராகுல் கட்சித் தலைவர் பதவிலேர்ந்து விலகக் கூடாது. வலிமையான எதிர்க்கட்சி இந்தியாவுக்கு தேவைன்னு சொன்னேன். அப்ப பிஜேபிக்காரங்ககூட என்னை எதிரியாதான் நெனச்சங்க. இப்படியே பார்த்தா என்னை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சியோட ஆளா பாக்க இருக்கும் எனசொல்லிஇருக்கிறார் ரஜினி, என்னை பிஜேபியோட ஆள்னு முத்திரை குத்தப் பார்த்து என்கிட்ட இருக்கிற கிறிஸ்துவ, முஸ்லிம் சப்போர்ட்டை உடைக்கப் பார்க்குது திமுக. அதுக்கு நான் இடம் கொடுத்திட கூடாது என உறுதியாக இருக்கிறாராம் ரஜினி.

ஸ்டாலினின் இந்த பிளானை மொத்தமாக உடைக்கும் முயற்சியில் இருக்கிறாராம் ரஜினி,மேலும் தனக்குப் பின்னால் இருக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ பலத்தை உடைக்க, திமுக திட்டமிடுவதாகக் கூறி அதைத் தடுக்கும் வேலைகளிலும் ரஜினி இறங்கிவிட்டார்.