* டி.டி.வி. தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக கடம்பூர் ராஜூ இருக்கிறார். எனவே அமைச்சர்கள் மட்டுமே ஆட்சியைத் தக்க வைக்க முடியாது. வரும் தேர்தல்களில் சரியான நபர்களை வேட்பாளராக்க வேண்டியது அவசியம்: என்று தூத்துக்குடி அ.தி.மு.க. நிர்வாகி மார்க்கண்டேயன் உதார். (ப்பார்றா, அந்த செல்லூர் புள்ள சிவனேன்னு தான் உண்டு, தன் ஆராய்ச்சி உண்டுன்னு இருக்குது. அதப்போயி ஏனுங்க வம்பிழுக்குறீங்க!?)

* கிறிஸ்துமஸுக்கு விஜய்சேதுபதி, தனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்தி என்று முக்கிய நடிகர்களின் படம் ரிலீஸ். இந்த ஹீரோக்கள் தமிழ்நாட்டின் மால் தியேட்டர் ஓனர்களுக்கே போன் போட்டு ‘என் படத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க பாஸ்!’ என்று கோரிக்கை வைக்கிறார்களாம்: செய்தி. (க்கும், நீங்க நடிச்சிருக்கிற படம் உருப்படியா இருந்தா அவிய்ங்களே முண்டியடிச்சுக்கிட்டு முக்கியத்துவம் தரப்போறாய்ங்க! பொருள் சரியில்லேன்னா எப்படி போணி பண்ணுறது?)

* சோனியா பேசுவதை மொழி பெயர்க்கும் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்காமல் பீட்டர் அல்போன்ஸிடம் ஸ்டாலின் ஒப்படைத்ததால் கடுப்பாகிவிட்டார் திருநாவுக்கரசர்!: செய்தி. (தல! உங்க ரேஞ்சுக்கு உங்க நண்பர் ரஜினிகாந்துக்கே டப்பிங் கொடுக்கலாம். நீங்க போயி சோனியாம்மாவுக்கு ஹிஹிஹி! விடுங்க விடுங்க.)

* ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு போயஸ் தோட்டப்பகுதி பொது மக்கள் கடும் எதிர்ப்பு: செய்தி. (யோவ், வருஷத்துக்கு ஒரு நாள் வந்தாதான் தீபாவளியை கொண்டாட முடியும். வாராவாரம் வந்தா பட்டாசு சத்தம், எண்ணையில் ஊறுன வடைன்னு காதும், வயிறும் கண்டம் ஆகிடும். பொருட்காட்சிக்குள்ள குடியிருக்கவா கோடி கோடியா கொட்டி அங்கே வீடு வாங்கினாங்க? அவுங்க கஷ்டம் அவுங்களுக்குதான் புரியும்.)

* ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் பொட்டாஷியம்தான் என்பது தெளிவாகிவிட்டது. இது அவருக்கு ஏற்கனவே இருந்த வியாதியால் வந்ததா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா? என்பதை கண்டறிய வேண்டும்: செய்தி. (அது யாருய்யா பொட்டாஷியம்? நமக்கு  தெரிஞ்சு அந்தம்மா, அந்தாளுங்க, இந்தாளுங்க...இவங்கதானே ஜெ.,வை சுத்தி இருந்தாங்க?)