அதிமுக ஆட்சியை கலைத்து விட்டு ஆளுநர் ஆட்சியை கொண்டு வந்தால் தமிழகத்தில் தானாக பாஜக வளர்ந்துவிடும் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.  திருச்சியில் துக்ளக் வார இதழின் பொன்விழா கூட்டம் நடைபெற்றது .  இதில் கலந்து கொண்டு பேசிய அவர்,  தமிழகத்தில் எதிர் வரும் தேர்தலில் அதிமுக, திமுகவும் பணத்தை கொடுக்காவிட்டால் ஜனநாயகத்தை நம்பியிருக்கும் ஒரு கட்சி எளிதாக வெல்லும் என்றார். 

தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அமைச்சரும் ஊழல் செய்யவே இல்லை என்று சத்தியம் செய்ய முடியுமா.? என்றார்,  அப்படி செய்த அமைச்சரிகளின் குடுமிகள் டெல்லியில் இருக்கிறது என்றார்.  பணநாயகம் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து வருகிறது,  இன்னும் இவர்கள் ஆட்சியில் இருந்ததால் ஒரு வாக்குக்கு நாலாயிரம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் மு. க ஸ்டாலின் 2000 கொடுப்பார்கள் எனவே இந்த ஆட்சியை கலைத்து விடுங்கள் என்றார்.

 

தற்போதுள்ள நிலையில் எந்த ஒரு ஆற்றல் இல்லாதவரும் எடப்பாடி இடத்தை எளிதில் நிரப்பி விடலாம்,  ஆனால் சோவின் இடத்தைத்தான்  யாராலும் நிரப்ப முடியாது என்றார்.  பாஜக வளர வேண்டுமென்றால் தன்னுடைய தார்மீக சக்தியை கொண்டு வரவேண்டும்,  மற்றவர்கள்  முதுகில் ஏறி நின்று சவாரி செய்ய வேண்டும் என்றால் எதற்கு உங்களுக்கு தனிக்கட்சி என்றார். 

எடப்பாடியின் ஆட்சி கலெக்ஷன், கரப்ஷன் ,  கமிஷன்  ,  என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை  என விமர்சித்தார்.  எடப்பாடியின் ஆட்சி தொடர்வதே திமுகவால் தான் என்றவர்,  அரசியல் சாக்கடை ஆகிவிட்டது என்றார்.  ரஜினி சொன்னது போல தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றார்.  என் உயிர் மூச்சு முடிவதற்குள் திராவிட கட்சிகள் தமிழகத்தில் இருந்து அழிக்கப்பட வேண்டும் என்றார். திராவிட இயக்கங்கள் தமிழால் வளர்ந்த இயக்கங்களே தவிர தமிழை வளர்த்த இயக்கங்களை அல்ல என்றார்.