ரஜினியின் ஆட்டம் ஆரம்பம்...!  தமிழகத்தில் ஆட்சி மாற்றமா..? 

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய உடன் திமுக மற்றும் அதிமுக இரண்டும் தலா பதினோரு இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி வண்ணம் இருந்தது. இந்நிலையில் சற்று மாறுபட்டு திமுகவிற்கு 13 இடங்களில் முன்னிலையிலும் அதிமுக 9 இடங்களில் முன்னிலையிலும் இருக்கின்றது. 

இதற்கிடையில் திமுக சட்டமன்ற இடைத்தேர்தலில் இடைத்தேர்தல் மட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென கருணாநிதியின் வாரிசு தமிழரசு மற்றும் செல்வி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று வணங்கி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க... இன்னொரு பக்கம் பரபரப்பாக இயங்கி வரும் அரசியல் கட்சிகள் அடுத்து தமிழகத்தில் என்ன நடக்கப்போகிறது? யார் யார் எந்த தொகுதியில் எத்தனை இடங்களை பிடிக்கப் போகிறார்கள் என வழி மீது விழி வைத்து காத்திருப்பதுபோல தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில் சட்ட மன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என அதிரடியாக கூறி வரும் நடிகர் ரஜினிகாந்த், இந்த தேர்தலை உற்று கவனித்து வருகிறார்.

அதன்படி தற்போது சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் ரஜினி மக்கள் மன்ற செயலாளராக உள்ள ராஜீ மகாலிங்கத்துடன் அவசர ஆலோசனையில் இன்று காலை ஈடுபட்டார். மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்றால், 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களை பெறக்கூடிய கட்சி திமுகவா ? அதிமுகவா ?என்பதை பொறுத்து ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும். இது தொடர்பாக ரஜினியின் அடுத்த கட்ட முடிவு என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.