Rajini realizes that the film is different from political - the state leader of perunthalaivar Party
புதுக்கோட்டை
சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை ரஜினிகாந்த் உணர வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் தனபாலன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நாடார் உறவின்முறை குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் தனபாலன் பங்கேற்றார்.
நிகழ்ச்சி முடிந்தபிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
"அரசியலுக்கு ரஜினி வருவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அவர் இலங்கை பிரச்சனை, காவிரி நதிநீர் பிரச்சனை, முல்லை பெரியார் பிரச்சனைகளில் குரல் கொடுக்கவில்லை. வெள்ளப் பாதிப்பின்போதும் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை.
சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை அவர் உணர வேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவது தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது
சிவகாசியில் ஜி.எஸ்.டி.யால் 950 பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலை நிறுத்ததத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் சீன பட்டாசுகள் இறக்குமதியாகி உள்ளூர் உற்பத்தி அழியும் அபாயம் உள்ளது.
குளைச்சல் துறைமுகம் வந்தால் தமிழகம் வளம் பெறும். அதற்குண்டான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.
