rajini nagma sudden meeting

மகளிர் காங்கிரஸ் பொது செயலாளர் நக்மா நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தேசிய அளவில் மையம் கொண்டிருந்த நக்மா என்னும் அரசியல் புயல் தற்போது தமிழகத்தில் மையம் கொண்டு சுழன்று புயல் அடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த செய்தியாளர்கள் சந்திப்பு, தமிழக அரசு மீது பாய்ச்சல் என படுவேகத்தில் பயணித்துக் கொண்டிக்கிறார் நக்மா...

போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் நக்மா தான் என்று நெட்டிசன்கள் கொளுத்திப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை... 

இந்தச் சூழலில் நடிகர் ரஜினிகாந்தை நக்மா திடீரென சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இச்சந்திப்பில் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

அரசியலைத் தாண்டி பாட்ஷா திரைப்படத்தின் அப்போதைய இமாலய வெற்றியையும், தற்போது அத்திரைப்படம் டிஜிட்டல் ஆக்கப்பட்டு வருவதையும் இருவரும் சிலாகித்துப் பேசியதாகக் கூறுகின்றனர் போயஸ் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள்..