திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதையறிந்த ஏராளமான திமுக தொண்டர்களும், ரஜினியின் ரசிகர்களும் கோபாலபுரத்தில் திரண்டுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 3 நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சாப்பிடும் மருந்துகளில் ஒன்று, அவரது உடல்நிலைக்கு ஏற்கவில்லை. இதனால், அவருக்கு அலர்ஜி ஏற்பட்டு, உடலில் கொப்புளங்கள் உருவாகிவிட்டது. இதையடுத்து சிறப்பு மருத்துவர்கள், அவரது வீட்டிலேயே சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கருணாநிதிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது என அறிந்ததும், ஏராளமான திமுக தொண்டர்கள், அவரது வீட்டுக்கு திரண்டனர். இதனால், அவர் ஓய்வெடுக்க முடியாமல் ஆனாது. இதையொட்டி, தொண்டர்களும், நிர்வாகிகளும் கருணாநிதியை சந்திக்க வரவேண்டாம். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைய ஒத்துழைப்பு தரவேண்டும் என திமுக தலைமை கழகம் அறிவித்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த நடிகர் ரஜினி, நேற்று குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடினார். பின்னர், திமுக தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதை அறிந்ததும், அவரை இன்று சந்திக்க அனுமதி கேட்டதாக தெரிகிறது.

நடிகர் ரஜினி, திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க இருக்கும் செய்தி, அனைத்து ரசிகர்கள், திமுக தொண்டர்கள், பத்திரிகையாளர்களுக்கும் தெரிந்தது. இதையடுத்து, கோபாலபுரத்தில் பெரும் படையாக திரண்டுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு காணப்படுகிறது.