40 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை கன்னடர் என்று தமிழக மக்கள் நினைத்திருந்தால் இன்று நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியுமா என நடிகர் ரஜினிகாந்த்க்கு தமிழக பாஜக தலைவர்  தமிழசை கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் சார்பில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்க செல்லும் முன்பு  செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,  தமிழகம் – கர்நாடக மாநிலங்களிடையே காவிரி பிரச்சனை பற்றி எரிந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை துணை வேந்தராக நியமித்திருக்கக் கூடாது என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, சட்டவிதிகளின்படியே அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார் என கூறினார். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் இதை கொச்சைப்படுத்தியிருக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டார்.

40 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை கன்னடர் என்று தமிழக மக்கள் நினைத்திருந்தால் இன்று நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியுமா ?  என நடிகர் ரஜினிகாந்த்க்கு தமிழசை கேள்வி எழுப்பினார்.