ரஜினி பிஜேபி - யின் கைக்கூலி..! 

சமீபத்தியத்தில் மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்ட திருநங்கையான அப்சரா, வந்ததும் வராதுதுமா ரஜினியை பற்றி மோசமாக விமர்சனம் செய்ய தொடங்கி  உள்ளார். ரஜினி பிஜேபி- யின் கைக்கூலி என்றும், கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன் என சொல்கிறாரே தவிர வருவதில்லை. அவர் சிறந்த நடிகர் எனவே நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும் என அப்சரா தெரிவித்து உள்ளார்.

இத்தனைக்கும் அப்சரா ஆரம்ப காலக்கட்டத்தில் பாஜவில் தான்  தன்னுடைய முழு ஈடுபாட்டையும் வைத்து இருந்தார். அதன் பின் எங்கு மவுசு கிடைக்குமோ என எதிர்பார்த்த சமயத்தில் தான் சசிகலா மூலமாக ஜெயலலிதா முன் அதிமுகவில் இணைந்தார்.

பின்னர், பின்னர் ஜெயலலிதா இறப்பு, சசிகலா ஜெயில், டிடிவி தினகரன் புதிய கட்சி என சில மாற்றங்கள் வரவே, தினகரனின் அமமுக கட்சியில் இருந்து வந்தார். இருப்பினும், ஆரம்பம் முதலே தினகரனுடன் பல்வேறு கருத்து வேறுபாடு நிலவி வந்தது. அதுமட்டுமல்லாமல் அமமுக - வில் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்காத காரணத்தால், தற்போது அங்கிருந்து விலகி மகிளா காங்கிரசில் மிக பெரிய பொறுப்பான தேசிய செயலாளர் பதவியை பெற்று உள்ளார்.

ஆக கட்சிக்கொள்கைகளில் பிடிக்காமல் வேறு கட்சிக்கு மாறுவதை விட, அடிக்கடி கட்சி தாவலில் ஈடுபடுவதே இவருடைய கொள்கையாக உள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது. இதுவரை மாநில கட்சியில் இருந்து வந்த அப்சரா தற்போது, தேசிய கட்சியில் காலடி எடுத்து  வைத்த உடன், ரஜினியை பற்றி மோசமாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளார். இதனால் அப்சராவிற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.