Asianet News TamilAsianet News Tamil

ரஜினி மன்ற செயலாளர்களுக்கு அழைப்பு... நாளை சென்னையில் மீண்டும் ஆலோசனை... ரஜினி முடிவில் மாற்றம்?

கூட்டத்தில், 3 கேள்விகளை நடிகர் ரஜினிகாந்த எழுப்பியதாகவும், கட்சி ஆட்சிக்கு வந்து அமைச்சரனால், கட்சி பதவி பறிக்கப்படும், இளைஞர்களுக்குத் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு அளிக்கப்படும், கட்சி ஆட்சிக்கு வந்தால், தான் அதிகாரத்துக்கு வரமாட்டேன் என்று கட்சித் தலைவராக மட்டுமே செயல்படுவேன் என்று ரஜினி கூறினார் 

Rajini fans association functionaries meet with rajini tomorrow
Author
Chennai, First Published Mar 11, 2020, 7:20 AM IST

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சென்னைக்கு வரும்படி நடிகர் ரஜினிகாந்த மீண்டும் அழைப்புவிடுத்துள்ளார்.

Rajini fans association functionaries meet with rajini tomorrow
சென்னையில் மார்ச் 5-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் மாவட்டங்களில் ரஜினிக்கு உள்ள ஆதரவு, புதிய கட்சி தொடங்குவது, மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கை உள்பட பல விஷயங்கள் பற்றி பேசப்பட்டதாக தகவல் வெளியானது.Rajini fans association functionaries meet with rajini tomorrow
கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “பல விஷயங்கள் தொடர்பாக பேசினோம். மாவட்ட செயலாளர்கள் பல கேள்விகள் எழுப்பினர். அவர்களுக்கு பதில் அளித்தேன். அதில் அவர்கள் திருப்தி அடைந்தார்கள். ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஏமாற்றம். அது என்ன என்பதை பின்னர் தெரிவிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ரஜினியின் அந்த ஏமாற்றம் என்ன என்பது மீண்டும் விவதமாகக் கிளம்பிவிட்டது.  Rajini fans association functionaries meet with rajini tomorrow
கூட்டத்தில், 3 கேள்விகளை நடிகர் ரஜினிகாந்த எழுப்பியதாகவும், கட்சி ஆட்சிக்கு வந்து அமைச்சரனால், கட்சி பதவி பறிக்கப்படும், இளைஞர்களுக்குத் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு அளிக்கப்படும், கட்சி ஆட்சிக்கு வந்தால், தான் அதிகாரத்துக்கு வரமாட்டேன் என்று கட்சித் தலைவராக மட்டுமே செயல்படுவேன் என்று ரஜினி கூறினார் என்றும், இரண்டு விஷயங்களை ஏற்றுக்கொண்ட மா.செ.க்கள், முதல்வர் பதவி ஏற்கமாட்டேன் என்று ரஜினி சொன்னதை ஏற்கவில்லை. அதுதான் அவருடைய ஏமாற்றம் என்று செய்திகள் வெளியாயின. இந்தக் கேள்விகளை ரஜினி கேட்டது உண்மைதான் என்று தமிழருவி மணியனும் தெளிவுப்படுத்தினார்.Rajini fans association functionaries meet with rajini tomorrow
ரஜினி தொடர்பான இந்த விவாதம் இன்னும் முடியாத சூழலில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் அனைவரும் நாளை(மார்ச்-12) காலை 8 மணிக்கு ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு வரும்படி ரஜினி உத்தரவிட்டுள்ளார்.  நாளை மீண்டும் அவர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்த உள்ளார். மீண்டும் ரஜினி மா.செ.க்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதால், கடந்த 5-ம் தேதி பேசப்பட்ட விஷயங்களுக்கு விளக்கம் அளிப்பாரா  அல்லது அதிலிருந்து மாறுப்பட்ட முடிவை அறிவித்து அவர்களைக் குஷிப்படுத்துவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios