Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடியார் பயத்தால்தான் ரஜினி அரசியலுக்கு வர தயங்குகிறார்... நக்கலடிக்கும் நமது அம்மா நாளிதழ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் தயக்கத்திற்கும், பின்வாங்கலுக்கும் பிரத்யேக காரணமாக அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒரு உழவன் வீட்டில் உதித்த முதல்வரான உலகத் தமிழினம் உளமார வியந்து போற்றுகிற ஒப்பற்ற தலைவனாக எடப்பாடியார் எடுத்துவிட்ட அரசியல் விஸ்வரூபம் ரஜினிகாந்துக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கும் தெளிவையும் யதார்த்தத்தையும் உணர்த்தி இருக்கிறது.

rajini enter politics entry fear of edappadi palanisamy
Author
Chennai, First Published Mar 13, 2020, 4:41 PM IST

உழவன் வீட்டில் உதித்த முதல்வரான உலகத் தமிழினம் உளமார வியந்து போற்றுகிற ஒப்பற்ற தலைவனாக எடப்பாடியார் எடுத்துவிட்ட அரசியல் விஸ்வரூபம் ரஜினிகாந்துக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கும் தெளிவையும் யதார்த்தத்தையும் உணர்த்தி இருக்கிறது என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு கூறியுள்ளது. 

இதுதொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில்;- நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். எம்.ஜி.ஆரின் ஆட்சியை என்னால் தரமுடியும் என அறிவிப்புகளால் அரசியல் உலகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடைப்பட்ட சில மாதங்களில் தன் நிலையில் இருந்து மாறி யதார்த்தத்தை உணர்ந்து கொண்டவராக சுருதி மாறி தற்போது பேசியிருக்கிறார். அம்மாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட வெற்றிடம் அவருக்கு அரசியல் சபலத்தை ஏற்படுத்தியது அன்றைய அறிவிப்புகளுக்கு காரணமாக இருக்கலாம்.

rajini enter politics entry fear of edappadi palanisamy

ஆனால், வெற்றிடங்கள் என்பது யாருடைய வருகைக்கும் காத்திருக்காமல் தம்மைத் தாமே நிரப்பிக் கொண்டு விடும் என்னும் தத்துவார்த்தத்தை போல அஇஅதிமுகவும், அதன் ஆட்சியும் புரட்சித்தலைவி அம்மாவின் ஒப்புமையில்லா உயரிய இடத்தை தனது உழைப்பால் மக்களின் தேவையறிந்து ஆற்றிய சேவைகளால் பூர்த்தி செய்து கொண்டு புதிய எழுச்சியை கழகம் பெற்றுவிட்ட காரணமே. சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் தயக்கத்திற்கும், பின்வாங்கலுக்கும் பிரத்யேக காரணமாக அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒரு உழவன் வீட்டில் உதித்த முதல்வரான உலகத் தமிழினம் உளமார வியந்து போற்றுகிற ஒப்பற்ற தலைவனாக எடப்பாடியார் எடுத்துவிட்ட அரசியல் விஸ்வரூபம் ரஜினிகாந்துக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கும் தெளிவையும் யதார்த்தத்தையும் உணர்த்தி இருக்கிறது.

rajini enter politics entry fear of edappadi palanisamy

அரசியல் என்பது திரைப்படங்களில் போல முதல் காட்சியில் ஆசைப்பட்டு மூன்றாவது காட்சியிலேயே கைக்கு எட்டி விடுகிற கற்பனை நாற்காலி அல்ல என்பதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருப்பது அவரது மனதெளிவைக் காட்டுகிறது. ஆனால், சிலரோ தமிழகத்துக்கு அரசியலில் தங்களால் பிரகாசிக்க முடியாது என்று தெரிந்திருந்தாலும் தொண்டூழியம் எனப்படுகின்ற அரசியலை தங்களது பிழைப்பாக்கான ஃபண்டூழியமாக்கிக் கொள்ள முயற்சிப்பதால் தான் தங்களுக்கு கைகூடாது என தெரிந்தும் அரசியல் அடம்பிடிப்பை இன்னும் ஒப்புக்கு சில தொடர்கிறார்கள். தமிழகத்துக்கு அரசியலில் தான் வந்து தான் இனி எதையும் சரி செய்ய வேண்டும் அவசியமோ, தேவையோ தற்போது இல்லை என்பதை சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடவடிக்கைகள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. 

rajini enter politics entry fear of edappadi palanisamy

இது அவருக்கு தோல்வியல்ல உண்மையில் அது அண்ணா திமுகவின் அதனை வழிநடத்தும் இபிஎஸ், ஓபிஎஸ் என்கிற இணைகரத்து தலைமையாக்கும், இவையாவிற்கும் மேலாக தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கின்ற முதல்வர் எடப்பாடியாரின் தலைசிறந்த தொண்டுக்கள் கிடைத்திருக்கும் அங்கீகாரம் என்றுதான் இதனைக் குறிப்பிட வேண்டும். புயல் அடிக்கும் காலத்தில் பொறி விற்க வருவதும் மக்களிடம் புதிய தலைமைக்கான தேடல் இல்லாத சமயத்தில் பொதுவாழ்வுக்கு வருவதும் கோமாளிக் கூத்து ஆகிவிடும் என்பைத சூப்பர் ஸ்டாரின் தயக்கம் அவருக்கு மட்டுமின்றி ,அரசியலை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வளைத்து விடலாம் என கனா காணும் பலருக்கும் உணர்த்திருக்கிறது. 

rajini enter politics entry fear of edappadi palanisamy

எடப்பாடியார் என்கிற எளிமைச் சாமானியரால் சிஸ்டம் வெகுவாக செழித்தோங்கி வருகிறது. அதனால் வெற்றிடம் என்று சொல்லுக்கு தமிழக அரசியலில் இனி வேலை இல்லை என்றாகிவிட்டது. இதனை எல்லாம் உணர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் எதிர்வரும் காலத்தில் உருவாக்க விரும்பிய ஆன்மீக அரசியலுக்கு அதிமுகவே போதுமென ரஜினி கழகத்தை உளமார வாழ்த்தி போற்றும் விரைவில் வரப்போகிறது. இன்னும் உழைப்போம், ஈரிலை இயக்கத்திற்கு இணை இல்லை என்பதை மக்களின் பேராதரவால் இவ்வையகத்திற்கு உணர்த்துவோம். மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் மனதார போற்றும் வகையில் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என உன் அருமை புரிந்து புகழ் வழியும் ஜொழித்திடுவோம் என அதில் கூறப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios