rajini and kamal have no chance in tamilnadu politics

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகவும் அதை நிரப்பிவிடலாம் என கலைத்துறையினர் சிலர் நினைக்கின்றனர். ஆனால் அவர்களின் எண்ணம் ஈடேறாது என மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

வயது முதிர்வு காரணமாக கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார். ஜெயலலிதா மறைந்துவிட்டார். எனவே தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகி இருப்பதாக கருத்து நிலவுகிறது.

இந்நிலையில், ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி, வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால், கமல் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துவிட்டார்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் இன்று நடந்துவரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய மக்களவைத் துணைத்தலைவர் தம்பிதுரை, அதிமுக இருக்கும்வரை தமிழக அரசியலில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார். அரசியலில் வெற்றிடம் இருப்பதாக நினைத்து கலைத்துறையினர் சிலர் அரசியலுக்கு வரலாம் என நினைக்கின்றனர். ஆனால் அவர்களின் அரசியல் கனவு பலிக்காது. எம்.ஜி.ஆர் சினிமாவிலிருந்து நேரடியாக அரசியலுக்கு வந்துவிடவில்லை என தம்பிதுரை பேசினார்.