தமிழ் திரையுலகில் நீண்ட காலம் சூப்பர் ஸ்டார்களாக விளங்கிய ரஜினியும் கமலும் அரசியல் களத்துக்கு வந்துசேர்ந்தார்கள். கருணாநிதி, ஜெயலலிதாவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடம் இவர்களை அரசியலில் குதிக்கக் காரணமாக அமைந்தது. ரிட்டையர்மென்ட் ஆகும் வயதில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு இவர்கள் வந்ததது விவாதத்தையும் ஏற்படுத்தியது. அரசியலில் இவர்களின் இந்த ஆண்டு பயணம் சொல்லும் சேதி என்ன?

கமலின் மக்கள் நீதி மய்யம்:

ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்று சென்ற ஆண்டு காஸிப்புகள் ஓடிக்கொண்டிருந்த வேளையில், ‘நான் ஏற்கனவே அரசியலில்தான் இருக்கிறேன்’ என்று தனது வரவை வெளிப்படையாக அறிவித்தார் கமல். 2017-ல் அரசியல் அறிவிப்பு வெளியிட்ட நேரத்தில் ‘பிக் பாஸ்’ பிஸியாக இருந்தார் கமல். ‘பிக் பாஸ்’ முடிந்த பிறகு நிதானமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம்   மக்கள் நீதி மய்யம் எனும் அமைப்பை ஆரம்பித்ததாக அறிவிப்பு வெளியிட்டு கட்சிக்கொடி சின்னத்தை மதுரையில் அறிமுகப்படுத்தினார். அவரது கட்சியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

தொடக்கத்தில் வேகமெடுத்த மக்கள் நீதி மய்யத்தில் கட்சி நிர்வாகிகள் நீக்குவது, சிலர் விலகுவது என சற்று மந்த நிலைக்கு சென்றது. இதுவரை கட்சியின் கொள்கைகளை கமல் அறிவிக்காமல் ஊழல் ஒழிப்பு என்ற ஒற்றை கருத்தை மட்டுமே பேசிவருகிறார். தமிழக அரசுக்கு எதிராக குரல் உயர்த்தும் கமல், மத்திய அரசுக்கு எதிராக அடக்கிவாசிப்பது கமலுக்கு ஒரு பின்னடைவான விஷயம்தான். மற்ற அரசியல்வாதிகள்போல மக்கள் பிரச்னைகளில் தனது பங்களிப்பு எப்போதும் இருப்பது போல் கமல் பார்த்துக் கொள்கிறார். சினிமாவில் ஆதிக்கம் செலுத்திவராக கமல் இருந்திருக்கலாம். ஆனால், வரப்போகும் 20 தொகுதி இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் போன்றவை வருங்காலத்தில் கமலுக்கு அக்னிப் பரீட்சையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ரஜினியின் மக்கள் மன்றம்

 அரசியல் என்று கூறினாலே, எப்போதும் வானத்தை நோக்கி விரலை உயர்த்திய ரஜினியை, அரசியலுக்குள் கொண்டுவந்து சேர்த்தது இந்த ஆண்டு. ‘ நான் அரசியலுக்கு வருவேன். நமது படையும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கும்’ என ரஜினி அறிவித்து வரும் டிசம்பர் 31-ம் தேதியோடு ஓராண்டு முடியப்போகிறது.

ரஜினியின் அரசியல் அறிவிப்பு இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி முதலே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மன்ற உறுப்பினர் சேர்க்கையைத் தாண்டி அரசியல் கட்சித் தொடங்குவதற்கான எந்த முன்னேற்பாடுகளும் இதுவரை ரஜினியிடம் தெரியவில்லை. தனது கட்சி எப்படி இருக்கும், கொள்கை என்ன என்பது பற்றியெல்லாம் இந்த ஆண்டில் ரஜினி எங்கும் தெளிவாகப் பேசவில்லை. ஆன்மிக அரசியல் என அறிவித்தது அவரது ஆதரவாளர்களால் வரவேற்கப்படுகிறது. அதே அளவுக்கு அது விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

தனது கட்சி நேரடியாகச் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும். அதுவரை அரசியல் கருத்துக்களை விமர்சனங்களை வைக்க மாட்டோம் என முதலில் ரஜினி பேட்டி அளித்தார். பின்னர் தனியார் பல்கலைக்கழக எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினி தமிழகத்தில் பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. நான் ஆட்சியைப் பிடித்து எம்ஜிஆர் ஆட்சியைக் கொடுப்பேன் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அவ்வப்போது அரசியல் களத்தில் ரஜினி அரசியல் கருத்துகளைக் கூறுவது, பின்னர் காணாமல் போவதும் தொடர்கிறது.  ஐபிஎல் விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கு எதிராக ரஜினியின் கருத்து சமூக வளைதளங்களில் பேசுபொருளானது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் முதலில் அரசை விமர்சித்த ரஜினி, பின்னர் பல்டியடித்தார். போகும் முன்னர் மக்களுடைய பாதிப்புகளைப் பற்றி பேசிவிட்டு சென்றவர், திரும்பி வரும்பொழுது துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார். அந்தக் கருத்தும் கடுமையாக விமர்சனத்துக்குள்ளானது. 7 பேர் விடுதலையில் ரஜினி  தெரிவித்த கருத்தும் விமர்சிக்கப்பட்டது.

மோடியை பலசாலி என்ற சொன்னவர், தேர்தல் தோல்விக்கு பிறகு