உதயநிதி ஸ்டாலினை ரகசியமாக சந்தித்து கூட்டணி குறித்து பேசவில்லை. அதற்கான அவசியமும் இல்லை என கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கன்னியாகுமரி மாவட்டம் இரையும்மன் துறை, தூத்தூர் மீனவ கிராமங்களில், மீனவ மக்களை சந்தித்துப் பேசினார். பின்னர், தேங்காய்ப்பட்டனம் அருகே உள்ள இறையுமன்துறை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’திமுகவோடு கூட்டணி அமைப்பது குறித்து உதயநிதி ஸ்டாலினை ரகசியமாக கமல் சந்தித்துப் பேசியதாக வெளியான தகவல் ஊடகங்களின் யூகம்தான். யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 

ஒவைசி, நாம் தமிழர் கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைப்பதாக வெளியான தவல்களும் ஊடகங்களின் யூகதான். எம்ஜிஆர் வழியில் தமிழ் ஈழத்திற்கு குரல் கொடுக்கும் தேவை வந்தால் கண்டிப்பாக குரல் கொடுப்பேன். தற்போது அந்த தேவை வந்துள்ளது. கேரளா உள்ளாட்சி தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றுள்ளது மக்களுக்கு நல்லது செய்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்பதின் அடையாளம். நானும் ரஜினியும் இணைவது குறித்து அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். ரசிகர்கள் சந்தோசமாக ஏற்கிறார்கள். விவசாயிகள் போராட்டத்திற்கு முதல் முதலில் தமிழகத்தில் ஆதரவு கொடுத்த கட்சி மக்கள் நீதி மயம்தான்’’என்று அவர் தெரிவித்தார்.