பிரதமர் மோடி ஸ்டன்ட் மாஸ்டர், மல்யுத்த வீரர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழாரம் சூட்டியுள்ளார்.  

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கனிமொழியின் தாயும், கலைஞரின் துணைவியுமான ராஜாத்தி அம்மாள் கடவுளை வணங்குவது நல்லதுதான் எனக் கருத்து தெரிவித்த அமைச்சர், தாலி அறுக்கும் வீரமணியை உடன் வைத்திருந்தால் ஓட்டு கிடைக்குமா? எனக் கேள்வி எழுப்பினார்.

 

வைகோவை பிளாக் மெயில் செய்து பேச வைப்பதாகவும் அவர் ஏதோ இக்கட்டான சிக்கலில் சிக்கியிருப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்யாமல் குக்கர் கேட்டாலும் மக்கர் கேட்டாலும் கிடைக்காது என்றார். திறமை இருப்பதாகக் கூறுபவர்கள் வடச்சட்டி சின்னத்தில் போட்டியிட வேண்டியது தான் என்றும் அமைச்சர் விமர்சித்தார். டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார். என குற்றம்சாட்டினார். 

ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் என ராகுல்காந்தி அறிவித்த வாக்குறுதி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்படியாயின் தாங்கள் 2 லட்சம் கொடுக்கிறோம் எனக் கேலியாகத் தெரிவித்த அவர், ஏமாற்றுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? என ஆவேசப்பட்டார். அப்போது ராகுல் காந்தி கூறியதை ராஜீவ்காந்தி அறிவித்தாகவும் அவர் தவறாகக் குறிப்பிட்டார்.