rajendira balaji said about kamal hasan
நடிகர் கமல்ஹாசன் நாளை கட்சி தொடங்க உள்ளதால் தன்னுடைய பயணத்தை தொடங்கி உள்ளார்.
அதற்கு முன்னதாக, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்ளை நேரில் சந்தித்து ஆசி ப்பெற்று தன்னுடைய பயணத்தை தொடங்கி உள்ளார்.
அந்த வரிசையில்,நடிகர் ரஜினிகாந்த், விஜய்காந்த், நல்லகண்ணு, முன்னாள் தேர்தல் அதிகாரி சேஷன் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்..
அதே போன்று இன்று நாம் தமிழர்கட்சி சீமான் உள்ளிட்டோரும் கமல் ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்
இந்நிலையில்,இது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலின் அரசியல் பயணம் குறித்து வாய் திறந்துள்ளார்.
அதில், "கட்சி தொடங்கும் கமல் ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரி இல்லை..எத்தனை கமல் ஹாசன் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது..என்றும்,கட்சி நடத்துபவர்களிடம் கமல்,கட்டிபுடி வைத்தியம் செய்கிறார் என்றும்,கட்சி நடத்துபவர்களிடம் ஆதரவு கோரும் கமலின் முடிவு,கேலிக்கூத்தாக முடியுமே தவிர,விஸ்வரூபமாக மாறாது என தெரிவித்துள்ளார்.
ஆனால் எத்தனை கமல்ஹாசன் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்து இருப்பது,கமலை பார்த்து கொஞ்சம் தடுமாறுவது போல் உள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்
