ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதேபோல நலத்திட்ட உதவிகள், நிவாரணப் பணிகள் என களத்தில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொற்று உறுதியாகிறது. அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன், தங்கமணி ஆகியோர் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையம் தொகுதி, திமுக எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ள நிலையில் தற்போது எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

தமிழகத்தில் இதுவரை அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் உட்பட 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து 4 திமுக எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளார்.