இலங்கையின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ முஸ்லிம் பெண் ஒருவரை மறுமணம் முடித்துள்ளதாக படங்களுடன் சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று தீயாய்ப் பரவி வருகிறது. 

மஹிந்த ராஜபக்‌ஷே  களுத்துறை மாவட்டம் பேருவளையில் நடைபெற்ற முஸ்லிம் திருமணமொன்றில் கலந்துகொண்டிருந்த நிலையில் மேற்படி புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இச்செய்தி உண்மையானதல்ல என்றும் இஸ்லாமிய முறைப்படி மணமகளை பெரியவர் ஒருவர் ஆசீர்வதிப்பதற்காக அவருக்கு அருகில் அமரவைக்கப்படுவது  சம்பிரதாயமான வழக்கமாகும் எனவும் அதன்படியே மஹிந்த ராஜபக்‌ஷ மணமகளுக்கு அருகில் அமர்ந்திருந்தார் எனவும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியில் நீடிக்க தொடர்ந்து சர்ச்சைகளை ராஜபக்‌ஷே சந்தித்துவரும் நிலையில் இப்புகைப் படங்கள் அரசியல் வட்டாரத்தில் அவருக்கு மேலும் தலைவலியைக் கொடுத்துள்ளது.