ஜெயலலிதாவின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். 

யாதவ் சமூகத்தை சேர்ந்த இவருக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பூர் சொந்த ஊராகும். செல்வகணபதி, கண்ணப்பன், செங்கோட்டைன், ஜெயலலிதா உள்ளிட்ட அத்தனை பேருமே ஊழல் வழக்கில் சிக்கி சின்னபின்னமாகிபோனவர்கள் அவர். 

இந்த நிலையில் தான் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதே திமுக இணைந்தார் ராஜ கண்ணப்பன். பின்னர் அங்கு பெரியளவில் வளர்ச்சி இல்லாததால் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 

இந்த நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் பக்கத்து தொகுதியான ராமநாதபுரம் அல்லது மதுரையில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என மலைப்போல் நம்பியிருந்தார். மதுரை தொகுதி ராஜன் செல்லப்பா மகன் ராஜன் சத்தியனுக்கும், இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ள தொகுதிகளுக்கும் வேறு நபர்களை அதிமுக தலைமை அறிவித்துவிட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ கண்ணப்பன் அதிமுகவில் இருந்து அடியோடு விலகுவதாக அறிவித்துள்ளார். கண்ணப்பனின் இந்த அறிவிப்பு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் அதிர்ச்சியடை செய்துள்ளது. மேலும் அந்த பகுதிகளில் அதிமுகவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.