Asianet News TamilAsianet News Tamil

அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகத்தில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

24.04.2021 : மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியகுமாரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Rain in Tamil Nadu for next three days .. Chennai Meteorological Center Warning ..
Author
Chennai, First Published Apr 22, 2021, 4:49 PM IST

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  (1.5 கிலோமீட்டர் உயரம்வரை ) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 
22.04.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியகுமாரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

23.04.2021,: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியகுமாரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

Rain in Tamil Nadu for next three days .. Chennai Meteorological Center Warning ..

24.04.2021,: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியகுமாரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 25.04.2021, 26.04.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால்  பிற்பகல் முதல் காலை வரை  வெக்கையாகவும்,  இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும், வெள்ளை மற்றும் வெளிறிய வண்ண (light colour)  கதர் ஆடைகளை அணிவது சிறந்தது.

 Rain in Tamil Nadu for next three days .. Chennai Meteorological Center Warning ..

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு  வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால்  பிற்பகல் முதல் காலை வரை  வெக்கையாகவும்,  இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும், வெள்ளை மற்றும் வெளிறிய வண்ண (light colour)  கதர் ஆடைகளை அணிவது சிறந்தது. கடந்த 24 மணி நேரத்தில்  மழை அளவு: சிவலோகம்  (கன்னியாகுமரி) 4 சென்டிமீட்டர் மழையும்,  சித்தார் (கன்னியாகுமரி) 3 சென்டிமீட்டர் மழையும்,  கோவில்பட்டி  (தூத்துக்குடி) 2 சென்டிமீட்டர் மழையும், குழித்துறை (dist கன்னியாகுமரி) 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios