raid ttv dinakaran press meet
ரெய்டில் உள்நோக்கம் !! அதிமுகவை காப்பாற்ற எடுக்கும் முயற்சியைத் தடுக்கவே ரெய்டு ..கொந்தளிக்கும் தினகரன்!!!
ஜெயா டி.வி. மற்றும் தங்களது உறவினர்ககளின் வீடுகளில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை ரெய்டில் உள்நோக்கம் இருப்பதாகவும், அதிமுகவை தாங்கள் காப்பாற்ற எடுக்கும் முயற்சியைத் தடுக்கவே ரெய்டு நடத்தப்படுவதாகவும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட 187 இடங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஆயிரம் கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று 3 ஆவது நாளாக 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தற்போதும் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் ரெய்டு நடந்தபோது பேட்டி அளித்த டி.டி.வி.தினகரன், ரெய்டுக்கு மத்திய அரசு, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர்தான் காரணம் என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் இன்று சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், தற்போது நடைபெற்று வரும் ரெய்டில் உள்நோக்கம் இருப்பதாக தெரிவித்தார்.
உள்நோக்கத்துடன் ரெய்டு நடைபெற்ற வருகிறது என தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த திக தலைவர் கி.வீரமணி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஜி.கே.வாசன், தா.பாண்டியன், வைகோ, திருநாவுக்கரசர், சீமான் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.
ரெய்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார்கள் அனைத்தும் FAST TRACK நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், இது தொடர்பாக சென்னை அண்ணா சாலையில் உள்ள உள்ள ஒரு ஹோட்டலில் முக்கிய அரசியல் தலைவ்ர்கள் ஆலோசனை நடத்தியது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் தனக்கு தெரியும் என்பதால்தான் இது உள்நோக்கம் கொண்டது என உறுதியாக அவர் தெரிவித்தார்.

சரி என்னை விடுங்கள், புகழேந்தி வீட்டில் ஏன் ரெய்டு நடத்தினார்கள் ? தங்கச் தமிழ் செல்வனின் உதவியாளர் வீட்டில் ஏன் ரெய்டு பண்ணினார்கள் ? இதெல்லாம் உள்நோக்கம் கொண்டது இல்லையா ? என அவர் கேள்வி எழுப்பினார்.
மணல் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியை விஐவி ஆக்கியவர்கள், அவரின் டைரியில் இருந்ததவர்களிடம் இதுவரை ரெய்டு நடத்தப்பட்டதா ? இதையெல்லாம் விட்விட்டு தன்னையும், தனது உறவினர்களையும், ஆதரவாளர்களையும் குறி வைத்து இந்த ரெய்டு நடப்பதாக தினகரன் தெரிவித்தார்.
இதே போன்று அதிமுகவை காப்பாற்றுவதற்காக தான் எடுக்கும் முயற்சியை தடுக்கவே இந்த சோதனைகள் நடைபெறுவதாகவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
