Asianet News TamilAsianet News Tamil

ஜெக்கு நேரில் தலைவருக்கு போனிலா ? ராகுலின் செயலால் திமுக தொண்டர்கள் ஆதங்கம் 

rahul inquired-karunas-health-care
Author
First Published Nov 6, 2016, 5:33 AM IST


திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து காங்கிரஸ் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கனிமொழியிடம் நலம் விசாரித்தனர். ராகுல் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் பார்க்க சென்னை வருகிறார் , கூட்டணி தலைவர் உடல்நலத்தை போனில் விசாரிக்கிறார் என திமுக தொண்டர்கள் ஆதங்கமடைந்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு ஒவ்வாமை காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு உடல் முழுதும் கொப்பளங்கள் தோன்றியுள்ளது. 

rahul inquired-karunas-health-care

அவரது உடல் நலம் குறித்து பலரும் விசாரித்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதிக்கும் , ராகுல் காந்திக்கும் ஏழாம் பொருத்தம். ராகுல் காந்தி கடைசி வரை திமுக தலைவரை சந்திக்கவில்லை. தொடர்ந்து கருணாநிதியை புறக்கணித்து வருகிறார்.

2009 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக மத்தியில் அமைந்த போதும், மாநிலத்தில் முதல்வராக கருணாநிதி இருந்த போதும் ராகுல் காந்தி கருணாநிதியை தவிர்த்தே வந்தார். தமிழகம் வந்தால் மூத்த தலைவர் என்ற முறையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்காமல் செல்வார்.

rahul inquired-karunas-health-care

இது பற்றி செய்தியாளர்கள் ஒருமுறை கேட்டபோது நான் என் கட்சி வேலையாக வந்து செல்கிறேன் இதில் அவரை சந்திக்கும் அவசியம் இல்லையே என்று தெரிவித்துவிட்டார். 

முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சையில் இருப்பதை அறிந்து திடீரென நேரில் வந்து பார்த்துவிட்டு சென்றார். 
இந்நிலையில் கருணாநிதி உடல்நலம் குன்றி இருப்பது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.

rahul inquired-karunas-health-care

திமுக எம்பியும் கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். 

 முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் கனிமொழியிடம் தொலைபேசியில் விசாரித்தனர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் நலம் விசாரித்தனர்.

கருணாநிதிக்கு போனில் விசாரிப்பு கூட்டணியிலேயே இல்லாத அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு நேரில் போய் விசாரிப்பா? என்று திமுக தொண்டர்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios