Asianet News Tamil

பிப்ரவரி 27, 28, மார்ச் 1 ஆகிய மூன்று தினங்கள் ராகுல் காந்தி தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம். கே.எஸ் அழகிரி.

மோடிக்கு  52 இன்ச் மார்பு இருக்கலாமே தவிர மக்களின் பொருளாதாரத்தை சிந்திக்க கூடிய  ஆற்றல்  கிடையாது. மோடி மூன்று மாத்ததிற்கு ஒரு முறை ஒரு புதிய பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார். ஒரு பிரச்சினையையும் தீர்க்க இயலாத அரசாக மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது.


 

Rahul Gandhi will tour the Southern districts for three days on February 27, 28 and March 1. KS Alagiri.
Author
Chennai, First Published Feb 22, 2021, 4:50 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பிப்ரவரி  27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய  மூன்று தினங்கள் ராகுல் காந்தி  தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எனவும், மார்ச்  1 ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். நேற்று நாகர் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: சுதந்திர இந்தியாவில் வரலாறு காணாத பெட்ரோல்  டீசல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

108 டாலருக்கு கச்சா எண்ணெய் வாங்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியின் போது 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது சரியாக பாதி அளவு (54 டாலருக்கு) கச்சா எண்ணெய் கிடைத்தாலும் 100 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை குறைக்க எந்த திட்டமும் மோடி அரசிடம் இல்லை. 

மோடிக்கு  52 இன்ச் மார்பு இருக்கலாமே தவிர மக்களின் பொருளாதாரத்தை சிந்திக்க கூடிய  ஆற்றல்  கிடையாது. மோடி மூன்று மாத்ததிற்கு ஒரு முறை ஒரு புதிய பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார். ஒரு பிரச்சினையையும் தீர்க்க இயலாத அரசாக மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது. சிறுபான்மை மக்களின் போராட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு இப்போது அனைத்தும் வாபஸ் பெற்று விட்டதால் சிறுபான்மையினரின் வாக்கு கிடைக்காது. இது வேடிக்கையாக உள்ளது. எடப்பாடியின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது.எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி இவ்வளவு நாட்கள் ஆகியும் இந்த அரசால்  இரண்டாவது கல்லை கூட எடுத்து வைக்கமுடியவில்லை. இது அ.தி.மு.க., அரசின் தோல்விக்கான சான்று. பணமதிப்பு இழப்பு திட்டத்தை கொண்டு வந்தும் கருப்பு பண விவகாரம் வெற்றி அடையவில்லை. வெற்றியடைவில்லை என்பதை மோடி நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். 

கமல் ரஜினி  நண்பர்கள் அவர்கள் சந்திப்பது அரசியலில் தாக்கத்தையும்  ஏற்படுத்தாது, தற்போதைய அரசு தனியார் நிறுவனங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை கொண்டுவருகிறது. இதற்கு பி.எஸ்.என்.எல்., ஓர் உதாரணம். பி.எஸ்.என்.எல்., ன் காலை முறித்து ஜியோ விற்கு கொடுத்துள்ளார்கள். தமிழக காங்கிரஸ் செயற்குழு 24 ம் தேதி கூடுகிறது அதன்பிறகு தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவெடுப்போம். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு இல்லை. எங்கள் அணியில் கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டு விட்டன.  தமிழக சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும். பழையன கழிதலும், புதியன புகுத்தலும் என்ற அடிப்படையில் புதிய வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios