கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுங்கள் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.   சீனாவின் தோன்றிய கொரோனா அந்நாடு முழுவதும் பரவியுள்ளதுடன் சுமார் 76க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுக்க சுமார் 3,119 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர்.   சுமார் 90 ஆயிரத்து 443 பேர் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் சீனா ,  ஜப்பானை ,  அடுத்து ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது .  இதுவரை அங்கு 77பேர் உயிரிழந்துள்ளனர் .  

உலக அளவில் இதுவரை சிகிச்சை பெற்ற 48 ஆயிரத்து 128 பேர் வைரஸில் இருந்து மீண்டுள்ளனர் .  இந்நிலையில் கொரோனா இந்தியாவிலும் தன்னுடைய வேலையை காட்டத் தொடங்கியுள்ளது .  தற்போது டெல்லியை சேர்ந்த ஒருவருக்கும் ,  ஐதராபாத்தை சேர்ந்த ஒருவருக்கும் , ராஜஸ்தானில் இருந்து வந்த இத்தாலி நாட்டு பயணிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகிஉள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 28 பேருக்கு கொரொனா இருப்பது உறுதியாகி உள்ளது . பாதிக்கப்பட்டவர்களை  தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் அவர்களை அனைவரும்   நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார் . 

சீனாவைவிட மற்ற நாடுகளில் கரோனா வைரஸ்  பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது , இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ள ராகுல் காந்தி,  கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதற்காக திட்டங்கள் பற்றி பிரதமர் யோசிக்க வேண்டும் ,  சமூக வலைத்தளங்களில் நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்,  என கேட்டுக் கொண்டுள்ளார் .  இந்தியா அவசர நிலையை எதிர்கொள்ளும் போது , சவாலை ஏற்றுக் கொள்வதில் ஒவ்வொரு இந்தியரின் மீதும் கவனத்தை செலுத்துங்கள் என பதித்துள்ளார் .  தெலுங்கானா பாதிப்பு பற்றி சிங்கப்பூர் பிரதமர் எடுத்துவரும் திட்டம் தொடர்பான வீடியோ ஒன்றையும்  ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார் .