வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல், மூன்று தொகுதிகளை விரும்பி கேட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.. அதன்படி, கரூர், திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய, மூன்று தொகுதிகளை, காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க., ஒதுக்கி உள்ளது.

இந்த மூன்று தொகுதிகளில் போட்டியிடப் போவது யார் என்ற தகவல், தற்போது வெளியாகி உள்ளது. கரூர் - ஜோதிமணி, திருச்சி - திருநாவுக்கரசர், கிருஷ்ணகிரி - செல்லக்குமார் போட்டியிடுவர் என, தெரிகிறது. 

கரூர் தொகுதியில் போட்டியிட உள்ள ஜோதிமணி ராகுல் காந்திக்கு நெருங்கிய நண்பர். இதைப் போல திருநாவுக்கரசை  காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து அவரை தூக்கியபோது எம்.பி.சீட் உங்களுக்கு தரப்படும் என ராகுல் உறுதி அளித்திருந்தார். அதன்படி அவருக்கான திருச்சி தொகுதியை ராகுல் கேட்டிருந்தார்.

இதே போல் செல்லக்குமாரும் ராகுலுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவருக்காகவும் கிருஷ்ணகிரி தொகுதியை கேட்டு வாங்கியதாக கூறிப்படுகிறது.