உத்தர பிரதேச மாநிலத்தில், ராகுலின் சொந்த தொகுதியான அமேதியில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'ஏகே - 203' வகை துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர் , அமேதி நகரம், இனி, ஏகே - 203 கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளின் அடையாளமாக திகழும். இந்த துப்பாக்கிகள், அமேதியில் தயாரிக்கப்பட்டவை என, அறியப்படும்' என, பேசினார்.

அமலும் ராகுல் பெயர் குறிப்பிடாமல், பல முறை, மோடி, தாக்கி பேசினார். 'சிலர், எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் நிறைவேற்றாமல், வெற்று உரைகளை அளித்து வருகின்றனர்' எனவும் மோடி கூறினார்

இந்நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ,  அமேதியில், ஆயுதங்கள் தயாரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல்லை, 2010ல், நான் நாட்டினேன். பல ஆண்டுகளாக, அங்கு, சிறு வகை ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு சென்ற மோடி, பழக்க தோஷத்தில், மீண்டும் பொய்களை வாரி இறைத்துள்ளார். இதற்கு வெட்கப்பட வேண்டும் என கிண்டல் செய்துள்ளார்.