ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை கோரிய வழக்கை நாங்கள் ஏன்? விசாரிக்க வேண்டும் என்றும் இது தகுதிநீக்க வழக்கு இல்லையே என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, இன்பதுரை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்லாத ஓட்டுக்களை எண்ணினால், தோல்வியடைய நேரும்.
ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவம்பர் 22-ம் தேதி தடை விதித்து, வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, 203 தபால் ஓட்டுகள் மற்றும் 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க;- வீட்டு வாசலில் வைத்து அதிமுக பிரமுகரை சல்லி சல்லியாக வெட்டி சாய்த்த கொடூர கும்பல்... விருதுநகரில் பதற்றம்..!
அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் ஒரு அறையில் அக்டோபர் 4-ம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனிடையே மறு ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடைக்கோரி எம்.எல்.ஏ. இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அமித் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மறு ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட நவம்பர் 13-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க;- உல்லாசத்தின் போது ஓயாத போன் கால்... கடுப்பில் அவளை கொன்றேன்... கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!
இந்நிலையில். இந்த வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை கோரிய வழக்கை நாங்கள் ஏன்? விசாரிக்க வேண்டும் என்றும் இது தகுதிநீக்க வழக்கு இல்லையே என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, இன்பதுரை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்லாத ஓட்டுக்களை எண்ணினால், தோல்வியடைய நேரும் என்றும் முறையாக இல்லாத ஓட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதால், 49 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் வாதிட்டார். இதனையடுத்து, ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி தடை விதித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைக்கப்பட்டது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 13, 2019, 1:20 PM IST