நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் யாருக்கு சீட் தரலாம் என்பதில் திமுக தலைமை சிண்டை பிய்த்துக் கொள்ளாத குறையாக திண்டாடி வருகிறது. போன தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த அப்பாவு,’’இந்தமுறை எனக்குத்தான். ஸ்டாலினே சொல்லிட்டாரு’’என டமாரம் அடிக்காத குறையாக எல்லாரிடமும் சொல்லி வருகிறார். சென்ற முறையும் அப்பாவுவுடன் சீட்டுக்காக மல்லுகட்டிய கிரகாம்பெல்,’’இப்போது தப்பாது. பார்க்க வேண்டியவங்களைப் பார்த்து கொடுக்க வேண்டியதை கொடுத்திட்டேன்’’என தெம்பாக சொல்லி வருகிறார்.

 

இந்த போட்டியில் மூன்றாவது நபராக களமிறங்கியிருக்கும் நெல்லை திமுக எம்.பி ஞானதிரவியத்தின் மகன் சேவியரும் தனக்குத்தான் வாய்ப்பு என அடித்து சொல்கிறார். இவர்கள் தவிர இன்னும் அரை டஜன் பேரும் அறிவாலயத்தில் கியூவில் நிற்கிறார்கள்.’’வேட்பாளர் பட்டியல் வெளியானவுடன் வேறு எங்கு ரகளை ஏற்படுகிறதோ இல்லையோ ராதாபுரத்தில் நிச்சயம் இருக்கும்’’என்கிறார்கள் லோக்கல் உ.பிக்கள்