ஃபேஸ் புக்கில் லைவ் அடித்து சேலம் பாஜக அலுவலகத்திற்கு வாலண்டரியாக சென்று சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் தர்ம அடி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ். அவ்வப்போது சமூக நிகழ்வுகளை ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ எடுத்து பதிவிட்டு சமூக கடமையை வெளிப்படுத்துவார். அப்படி இன்று அவர் வாலண்டரியாக போய் சேர்ந்த இடம் சேலம் பாஜக அலுவலகம். அங்கு சென்ற அவர், காஷ்மீர் விவகாரம் குறித்து பாஜக தொண்டர்களிடம் கேள்வி எழுப்பினார். காஷ்மீர் பிரச்னை குறித்து விளக்கமளியுங்கள்? நீங்கள் தான் ஆளும் கட்சியாக இருக்கிறீர்கள்? பதில், சொல்லியே ஆக வேண்டும்? என பிடிவாதம் பிடித்தார் பியூஷ் மானுஷ். 

சேலத்தில் உள்ள குளங்களையெல்லாம் கெடுத்து வைத்திருக்கிறார் என பியூஷ் மீது கோபப்பட்டனர். நீ ராஜஸ்தானில் இருந்து வந்த வந்தேறி. உனக்கு எப்படி வருமானம் வந்தது? எனக் கேட்கின்றனர். அதற்கு பதிலளித்த பியூஷ் மானுஷ். நான் ராஜஸ்தானில் இருந்து வந்தாலும் நான் பிறந்தது இங்கு தான். நான் விவசாயம் செய்து சம்பாதிக்கிறேன். நான் வந்தேறி என்றால் மோடி- அமித் ஷா எல்லாம் வந்தேறிகளா? என பியூஷ் மானுஷ் கேள்வி கேட்டார். விவாதம் அப்ப்டியே இருவருக்கும் முற்ற ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பாஜக தொண்டர்கள் பியூஷ் மானுஷுக்கு செருப்பு மாலை அணிவித்து வெறுப்பேற்றினர். இதுதான் பாஜக தொண்டர்களின் லட்சணம் என கூறினார்.

 

இதனை அடுத்து பாஜகவினர் பியூஷ் மானுஷை முற்றுகையிட்டு தர்ம அடி கொடுத்தனர். அதனையும் பியூஷ் மானுஷ் தனது முகநூல் பக்கத்தில் லைவ் அடித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் பாஜக தொண்டர்கள் அவரது செல்போனை பிடுங்கிக் கொண்டனர். இந்த நிகழ்வு மூலம் பியூஷ் மானுஷ் வழியச் சென்று தர்ம அடி பெற்றுத் திரும்பியுள்ளார்.