புல்வாமா தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்க பாகிஸ்தான் எல்லை அருகே இந்திய விமானப் படையினர் பெரும் போர் ஒத்திகை நடத்தி வருகின்றனர். 

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகன் மீது ஆர்டிஎக்ஸ் குண்டுகள் பொறுத்தி தீவிரவாத தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில், 49 வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் இந்தியர்களின் இதயங்களை உலுக்கி எடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்க அனைத்து வகையிலும் உதவ தயாராக உள்ளதாக 48 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

 

பிரதமர் மோடியும், பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளதாகவும், ஒவ்வொரு சொட்டு கண்ணிருக்கும் பழிதீர்த்தே ஆக வேண்டும் எனவும் சூளுரைத்து இருந்தார். இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் எல்லை அருகே, இந்திய விமானப் படையினர் போர் ஒத்திகை நடத்தி வருகின்றனர். 

 

விரைவில் நடக்கவுள்ள பதிலடி தாக்குதலுக்காக, பாகிஸ்தானை ஒட்டியுள்ள ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் விமானப் படை சார்பில் ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் அனைத்து வகையான போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இரவு பகலாக பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஒதிகையில் 137 விமானங்களும் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்து வருகின்றன.

தவிர, இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை, வான்வழி ஏவுகணை சோதனையும் நடத்தப்பட்டது. இதனால் புல்வாமா தாக்குதலில் சந்தித்த மிகப்பெரிய இழப்புக்கு எப்போது வேண்டுமானாலும் இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.