pugazhendhi admk karnataka incharge pressmeet

''ஜெ,வின் சிகிச்சை புகைப்படங்கள் வெளியிடப்படும்… மரணத்தில் உள்ள மர்மங்கள் அவிழ்க்கப்படும்'' என கர்நாடக மாநில அதிமுக செயலாளரும் தினகரன் ஆதரவாளருமான பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து 75 நாட்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு,வந்த நிலையில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதிமாரடைப்பால் மரணமடைந்தார். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அவரது தோழி சசிகலா, மருத்துவர்கள் , செவிலியர்கள் தவிர வேறுயாரும் அவரை சந்திக்கவில்லை.

மருத்துமனைக்கு அவரை சந்திக்க வந்த ஆளுநர் வித்யா சாகர் ராவ்,மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி,முதலமைச்சர் பொறுப்பு வகித்த ஓபிஎஸ் என யாருமே அவரை சந்திக்கவில்லை. அதற்கான அனுமதியும்அளிக்கப்படவில்லை.

மேலும் அவர் சிகிச்சை பெற்றதற்கான எந்த ஆதாரமும் வெளியிடப்படவில்லை. மருத்துமனையில் சிசிடிவிகேமராக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் பொது மக்களுக்கு பெருத்த சந்தேகம் எழுந்ததது. ஜெ. பிணமாகத்தான் அப்பல்லோவுக்குகொண்டுவரப்பட்டார் என கூறப்பட்டது. சசிகலா அவரை அடித்துக் கொன்றுவிட்டார் என கூட சொல்லப்பட்டது.

இத்தனை பிரச்சனை வந்தும்கூட ஜெ,சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களோ, வீடியோகாட்சிகளோ வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஓபிஎஸ், ஜெ மரணத்தில் மர்மம்இருப்பதாக கூறி புயலைக் கிளப்பினார்.

அவரது மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் கோரிக்கைவிடுத்தனர். தொடர்ந்து ஜெ மரணம் குறித்து பல குழப்பங்கள் நிலவி வந்தன.

இந்நிலையில் மதுரையில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்றஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, , ஜெயலலிதா அப்பல்லோமருத்துமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் எனதெரிவித்தார்.

அந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டால் இங்குள்ள பலரின் முகமூடி கிழியும் என தெரிவித்தார். அந்தபுகைப்படங்களை வெளியிட முக்கியமான சிலரின் அனுமதி வேண்டியுள்ளதாகவும், அது கிடைத்தவுடன்விரைவில் வெளிளிடப்படும் என தெரிவித்தார்.

இந்த புகைப்பட ஆதாரங்கள் வெளியிடப்பட்டால் ஜெ மரணத்தில் ஏற்பட்டுள்ள மரணம் குறித்த ரகசியம்வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிளது...