pugalenthi press meet about sasikala

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் விரைவில் வந்து சந்திப்பார்கள் என கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி.தினகரன், டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரை அதிமுகவில் இருந்த ஒதுக்கி வைக்க வேண்டும் என அமைச்சர்கள் முடிவெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனை சந்திப்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தவிர்த்தனர். நேற்று முன்தினம் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுநந்தரத்தின் இல்ல திருமண விழாவுக்கு இருவரும் தனித்தனியாக பங்கேற்றனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மற்ற அமைச்சர்களும் விரைவில் வந்து சந்திப்பார்கள் என தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான் என்றும் அது அனைவருக்கும் தெரியும் என்றும் புகழேந்தி கூறினார்.