சாக்கடையில் இறங்கிய முதல்வர்..!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தானே சாக்கடையில் இறங்கி தூய்மை பணியை தொடங்கி வைத்தார். புதுச்சேரி முதல்வரின் சொந்த தொகுதியான நெல்லித்தோப்பில் நாராயணசாமி இன்று தூய்மை பணியை மேற்கொண்டார்.
 
நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகேயுள்ள வாய்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை கவனித்த முதல்வர் நாராயணசாமி, தானே வாய்க்காலில் இறங்கி குப்பைகளை அகற்ற முன்வந்தார்.

தன்னுடைய வேட்டியை மடக்கி கட்டி கால்வாயில் இறங்கி, தேங்கி நின்ற கழிவுநீரை அகற்றினார். இந்தியாவிலிலேயே இதுவரை எந்த ஒரு முதல்வரும் இது போன்ற ஒரு செயலில் இவ்வளவு ஆர்வமாக துணிந்து மக்கள் பணியில் ஈடுபட்டது கிடையாது.

ஏன் எந்த ஒரு அதிகாரியும் அரசியல் தலைவரும் தூய்மை பணியை துவக்கி வைக்கும் போது கூட, துடைப்பம் கொண்டு சுத்தம் செய்து இருப்பதை பார்த்து இருப்போம்.

ஆனால் மிக மோசமான துர்நாற்றம் மிக்க சாக்கடை கழிவில், ஒரு முதல்வர் மனதார இறங்கி தூய்மை பணியை மேற்கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் மக்கள் மீது அதிக அக்கறை கொண்ட ஒரு முதல்வராக நாராயணசாமி உள்ளதால், அவருக்கு அனைவர் மத்தியில் இருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.