பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை மற்றும் நலத்திட்ட அறிவிப்புகளின் மூலம் புதுச்சேரியில் பாஜக அமைவது உறுதியாகியுள்ளது. இதை புதுச்சேரி சர்வே ரிப்போர்ட்டும் உறுதி செய்துள்ளது.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, எம்.எல்.ஏக்கள் ராஜினாமா காரணமாக பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பாகவே புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில், வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் அன்றே, புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது.

புதுச்சேரியில் ஆட்சியமைப்பதில் உறுதியாக உள்ள பாஜக, அதற்காக புதுச்சேரியில் தீவிர களப்பணியாற்றிவருகிறது. பாஜக - அதிமுக கூட்டணி அமைத்து புதுச்சேரியில் தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணியும் உறுதி. என்.ஆர்.காங்கிரஸ் இன்னும் அதன் நிலைப்பாட்டை உறுதி செய்யவில்லை.
புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் புதுச்சேரியில் தீவிர களப்பணியாற்றிவருகின்றனர். காங்கிரஸ் ஆட்சி மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தியடைந்ததால், பாஜக ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதை சர்வே ரிப்போர்ட்டும் உறுதி செய்துள்ளது.

பெங்களூருவை அடிப்படையாக கொண்ட, தேர்தல் கருத்து கணிப்புகளை மேற்கொள்வதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் புதுச்சேரி மக்களிடம் மேற்கொண்ட கருத்து கணிப்பில், பாஜக கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் அமைவது உறுதி என்று தெரியவந்துள்ளது.
புதுச்சேரிக்கு கடந்த பிப்ரவரி 25ம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை தந்து, பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பணிகள் முடிக்கப்பட்ட நலத்திட்டங்களை தொடங்கிவைத்து, புதுச்சேரியில் பரப்புரை செய்துவிட்டு சென்றார்.

பிரதமர் மோடி வருகையும், நலத்திட்ட அறிவிப்புகளும், புதுச்சேரி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், பாஜகவிற்கான ஆதரவையும் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி பிப்ரவரி 25ம் தேதி புதுச்சேரி வந்தார். இந்த சர்வேயும் பிப்ரவரி கடைசி வாரத்தில் தான் எடுக்கப்பட்டது.
இந்த சர்வேயின்படி, பாஜக - அதிமுக கூட்டணி 23 தொகுதிகளில் வென்று ஆட்சியமைக்கும். காங்கிரஸ் - திமுக கூட்டணி வெறும் 3 தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் எல்.டி.எஃப் தலா ஒரு தொகுதிகளிலும் ஜெயிக்கும் என சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில், பாஜக - அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸும் இடம்பெற்றால், பாஜக கூட்டணி 28 தொகுதிகளை ஜெயிக்கும் என்றும் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெறும் ஒரு தொகுதியை மட்டுமே ஜெயிக்கும் என சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடியின் வருகை மக்களின் இந்த மனமாற்றம் மற்றும் ஒட்டுமொத்தமாக பாஜகவிற்கான ஆதரவாக அமைந்துள்ளது. பிரதமர் மோடியின் வருகை மற்றும் புதுச்சேரிக்கான நலத்திட்ட அறிவிப்புகள், சட்டமன்ற தேர்தலிலும் கண்டிப்பாக எதிரொலித்து பாஜக ஆட்சியமைக்கும் என்பது தேர்தலுக்கு முன்பாகவே தெள்ளத்தெளிவாக தெரிந்துவிட்டது.
பிரதமர் மோடி புதுச்சேரி வருகையின்போது தொடங்கிவைத்த மற்றும் திறந்துவைத்த நலத்திட்டங்கள்:
.* 2,426 கோடி மதிப்பிலான சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் இடையிலான என்எச் 45-ஏ தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார்..
* காரைக்கால் புதிய ஜிப்மர் வளாகத்தில் ரூ.491 கோடி மதிப்பில் கட்டப்படும் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
* சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் புதுச்சேரியில் சிறிய துறைமுகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.
* புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டுத் திடலில் பழைய ஓட்டப்பந்தய ஓடுதளத்தை மாற்றி ரூ.7 கோடியில் 400 மீட்டரில் செயற்கை ஓடுதளம் அமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.
* ஜிப்மரில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூடம் மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய ரத்த மையத்தை தொடங்கிவைத்தார்
* புதுச்சேரி கடற்கரை சாலையில் ரூ.14.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேரி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
*லாஸ்பேட்டையில் ரூ.11.85 கோடியில் கட்டப்பட்டுள்ள 100 படுக்கைகளுடன் கூடிய மகளிர் விடுதியை திறந்துத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
