செம்மலைக்கு எதிராக பொங்கி எழும் பொதுமக்கள்…மக்கள் துரோகி என குற்றச்சாட்டு..

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அதிமுக வின் பொதுச் செயலாளாராக சசிகலா தேர்வுசெய்யப்பட்டார்.

முதலமைச்சராக பணியாற்றிய ஓபிஎஸ் வர்தா புயல், ஜல்லிக்கட்டு குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் சிறப்பாக செயல்பட்டார். இதனால் கடுப்பான சசிகலா தரப்பினர் ,அவரை பதவியிலிருந்து விலகச் சொல்லி வற்புறுத்தினர். மேலும் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராகவும் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சசிகலா முதலமைச்சராக பதவியேற்கவிருந்த நிலையில், கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்தியதால், சசிகலா முதலமைச்சராக முடியாமல் போனது.

இந்நிலையில் எம்எல்ஏக்களின் தொகுதி மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் சசிகலாவை ஆதரிக்கக்கூடாது என தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தொலைபேசி,எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் எம்எல்ஏக்களை வலியுறுத்த வருகின்றனர்.

இதனிடையே சேலம் மாவட்டம், மேச்சேரி பெருந்து நிலையம் அருகே மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக . அமைப்பு செயலாளருமான செம்மலையை கண்டித்து அக்கட்சியினர் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.

அந்த பேனரில் புரட்சி தலைவி அம்மாவினால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ்ஐ ஆதரிக்காமல், மக்கள் போட்ட பிச்சையில் வெற்றி பெற்று மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மாபியா கும்பலுக்கு துணை போகும் மக்கள் துரோகி செம்மலையை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ க்களுக்கு எதிராக பொது மக்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.