Asianet News TamilAsianet News Tamil

திமுக கோட்டையான மத்திய சென்னை மக்களவை தொகுதியில் கெத்து காட்டி தரமான சம்பவம் செய்த பாஜக..!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக பயணம் மேற்கொண்டு வருகிறார். போகும் இடமெல்லாம் அண்ணாமலை பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். குறிப்பாக எந்த ஊருக்கு அண்ணாமலை போனாலும், ஆளுங்கட்சியான திமுகவை தாறுமாறாக விமர்சித்து வருகிறார். 

Public meeting held in central Chennai.. BJP shocked DMK tvk
Author
First Published Feb 12, 2024, 7:01 PM IST

துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட தங்கசாலை பகுதியில் பாஜகவின் பொதுக்கூட்டம் எதிர்பார்க்காத அளவிற்கு கூட்டத்தை காண்பித்து தேசிய தலைமையை வினோஜ் பி செல்வம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக பயணம் மேற்கொண்டு வருகிறார். போகும் இடமெல்லாம் அண்ணாமலை பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். குறிப்பாக எந்த ஊருக்கு அண்ணாமலை போனாலும், ஆளுங்கட்சியான திமுகவை தாறுமாறாக விமர்சித்து வருகிறார். 

இதையும் படிங்க: என்னது! 14 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை பதவியை கேட்டேனா? பிரேமலதா கொடுத்த பரபரப்பு விளக்கம்.!

Public meeting held in central Chennai.. BJP shocked DMK tvk

இந்நிலையில், என் மண் என் மக்கள் யாத்திரையின் 200 தொகுதி நாளை ஒட்டி சென்னையில் யாத்திரைக்கு போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது. அதே நேரத்தில், சென்னை சென்டரல் அருகே மின்ட் தங்க சாலையில் பாஜக பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மட்டும் காவல் துறை அனுமதி வழங்கியது.  

Public meeting held in central Chennai.. BJP shocked DMK tvk

அதன்படி சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட தங்கசாலை பகுதியில் பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக கோட்டையாக கருதப்படும் மத்திய சென்னை மக்களவை தொகுதியில் பொதுமக்கள் அதிகம் கலந்து கொள்ள மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆளுங்கட்சியை அதிர்ச்சியடைய செய்யும் அளவிற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை  தமிழக பாஜக மாநில இளைஞரணித் தலைவரும், மத்திய சென்னை மக்களவை தொகுதி அமைப்பாளருமான வினோஜ் பி செல்வம் முன்னின்று செய்தார்.  இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அப்போது மேடையில் ஜே.பி.நட்டாவுக்கு நினைவு பரிசை வினோஜ் பி செல்வம் வழங்கி கவுரவித்தார். 

இதையும் படிங்க:  வடஇந்தியாவில் மோடிக்கு தனி செல்வாக்கு உள்ளதை யாரும் மறுக்க முடியாது - கார்த்தி சிதம்பரம் திட்டவட்டம்

இதனையடுத்து பொதுக்கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா: பிரதமர் மோடிக்கு தமிழகம் மிகவும் இதயத்திற்கு நெருக்கமான ஒரு மாநிலமாகும். அவர் உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் தமிழர்கள் குறித்தும் குறிப்பாக தமிழ் மொழி குறித்தும் பேசாமல் இருந்ததில்லை என்றார். மேலும் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தும், திமுகவின் விளக்குகள் அணைக்கப்படும் நேரம் விரைவில் வரும் என்று பேசியிருந்தார். மத்திய சென்னைக்கு உட்பட்ட துறைமுகம் தொகுதியில் எதிர்பார்க்காத அளவிற்கு கூட்டத்தை காணப்பித்து தேசிய தலைமையில் குட்புக்கில் இடம் பிடித்துள்ளார். ஆகையால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் வினோஜ் பி செல்வம் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக மாநில இளைஞரணித் தலைவரும், மத்திய சென்னை மக்களவை தொகுதி அமைப்பாளருமான வினோத் பி செல்வம் பேட்டியளிக்கையில்: எங்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரியை தொடங்கியது முதல் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் புரட்சி ஏற்படுத்திக் கொண்டிருப்பது ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய ஒரு பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக காவல்துறை ஏவல் துறை போல் பயன்படுத்தி போகின்ற இடங்களில் எல்லாம் யாத்திரைக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர் என தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios