வடஇந்தியாவில் மோடிக்கு தனி செல்வாக்கு உள்ளதை யாரும் மறுக்க முடியாது - கார்த்தி சிதம்பரம் திட்டவட்டம்

வடஇந்தியாவில் மோடிக்கு தனி செல்வாக்கு உள்ளது, ஆனால் தென் இந்தியாவில் அது குறைவு தான் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

narendra modi had a huge people support on north india said congress mp karti chidambaram vel

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடியின் செல்வாக்கு குறித்து நான் கூறிய கருத்தில் இருந்து நான் பின்வாங்க போவது கிடையாது. நான் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை. வட இந்தியாவில் மோடிக்கு என்று ஒரு செல்வாக்கு உள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் அவருக்கு செல்வாக்கு குறைவு. காங்கிரஸ் கட்சியில் இருந்து எனக்கு விளக்கம் கேட்டு  எந்த விதமான நோட்டீசும் வரவில்லை,

நான் சொன்ன கருத்தில் பிழை  இருப்பதாக தெரியவில்லை. நான் சிந்தித்து தான் கருத்து சொல்கிறேன். நான் இதுவரை பேசிய எந்த கருத்தும் தவறில்லை. மனசாட்சிக்கு உட்பட்டு தான் பேசி உள்ளேன். எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்ததாக பொய் பரப்பப்படுகிறது. விளக்க நோட்டீஸ் அனுப்பினால் பதில் அளிக்க நான் தயாராக உள்ளேன். அவர்கள் விளக்க நோட்டீஸ் அளிக்க முடியுமா என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.

திருச்சியில் பெண் பயணியை ஒருமையில் திட்டிய தனியார் பேருந்து நடத்துனருக்கு கும்மாங்குத்து

ஒரு அரசியல் கட்சி என்று இருந்தால் பலருக்கும் பல கருத்து இருக்கத்தான் செய்யும். என்னை பொறுத்தவரையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை தவிர இறந்து போனவர்கள் யாருக்குமே விருது வழங்கக் கூடாது என்பது என் கருத்து. விருது பெற்றவர்களை நான் குறைவாக மதிப்பிடவில்லை. அதேவேலையில் அந்த விருதினை வேண்டாம் என்று சொல்லக்கூடிய உரிமை அவர்களுக்கு இல்லாமல் போய்விடும். மனசாட்சிபடி  நான் யாரையும் ஒதுக்காமல் தான் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன்,

நீட் விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் வேண்டுமா வேண்டாமா என்று முடிவு எடுக்கும் உரிமையை மாநில அரசுக்கே வழங்கிடுவோம். கட்சி எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்ள நான் தயாரக உள்ளேன். கட்சி சீட் கொடுத்தால் நிற்பேன், எந்த தொகுதியில் நிற்க சொன்னாலும் நிற்பேன், கட்சி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுபடுவேன்.

கருத்துக்கணிப்பை நம்ப முடியாது ஒரு சிறிய அளவு மாதிரியை வைத்து ஒட்டுமொத்த மக்களும் இதே கருத்தில் தான் உள்ளனர் என்று கூற முடியாது. என்னை பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜக செய்யும் தவறுகளை பொதுமக்களிடம் குறிப்பாக வட இந்தியாவில் எடுத்துக் கூறினால் பாஜகவை எளிதாக வெல்ல முடியும்.

ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் 20 நாளில் திடீர் மரணம்.. நடந்தது என்ன?

தென்னிந்தியாவை பொறுத்த வரை குறிப்பாக தமிழகத்தில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. இந்த கூட்டணியில் இருந்து எந்த ஒரு கட்சியும் பிரிந்து போவதற்கு வாய்ப்பு கிடையாது. ஒரு கட்சியின் தேசிய தலைவர் தமிழகத்திற்கு வரலாம். அதனால் அந்த கட்சி வளர்ந்து விடும் என்று கூறுவது தவறு. என்றைக்குமே பாஜக தமிழகத்தில் வளர முடியாது.

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்குவதாக கூறியுள்ளார். ஆனால் அவருடைய கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து இதுவரை அவர் வெளியிடவில்லை. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் கிடையாது. கடைகளை குறைக்கலாம், திறக்கும் நேரத்தை குறைக்கலாம் தவிர பூரண மதுவிலக்கு என்பது முடியாத காரியம். அவ்வாறு செய்தால் கள்ளச் சந்தையில் மது விற்பனை அதிக அளவில் வளர்ந்து விடும்.

பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டாலும் காந்தி பிறந்த ஊரான பந்தரிலேயே மது, கள்ளச் சந்தையில் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில்  இளைய தலைமுறையினர் குறிப்பாக விஜய், விஷால், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை மற்றும் உங்களைப் போன்றவர்கள் கையில் தான் வருங்கால தமிழக அரசியல் உள்ளதாக கருதலாமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அரசியல் இருந்தாலும் சரி மற்ற சமுதாய நிகழ்வுகள் இருந்தாலும் சரி தலைமுறை மாற்றம் என்பது இயல்பு தான். அது அந்தந்த கட்சிகளைப் பொறுத்தது என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios