Asianet News TamilAsianet News Tamil

ஒரு வேலை இத படிச்சிருந்தா படித்தவர்கள் என்று சொல்லிருப்பாரோ… ஜே.பி.நட்டா கருத்துக்கு பி.டி.ஆர். பதிலடி!!

திமுகவில் படித்த தலைவர்கள் இல்லை என்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்துக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். 

ptr palanivel thiagarajan replies jp naddas statement about dmk studies
Author
First Published Sep 23, 2022, 11:30 PM IST

திமுகவில் படித்த தலைவர்கள் இல்லை என்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்துக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக காரைக்குடியில் பேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா, திமுக அரசு தமிழ்நாட்டில் மோசமான அரசியலை முன்னெடுத்துள்ளது. திமுக அரசு தமிழக மக்களை தவறாக வழி நடத்துகிறது. திமுக தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதாக கேள்விபட்டேன். நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அவர்கள் நீட்டை எதிர்த்தனர்.

இதையும் படிங்க: 3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம்.. வேண்டாவே வேண்டாம்.! அதுவும் காந்தி ஜெயந்தி அன்றா? ஜவாஹிருல்லா கோரிக்கை!

ptr palanivel thiagarajan replies jp naddas statement about dmk studies

திமுகவில் படித்த தலைவர்கள் யாரும் இல்லை. அதனால் தான் அவர்கள் நீட்டை எதிர்க்கின்றனர் என்று தெரிவித்திருந்தார். திமுக தலைவர்களை படிக்காதவர்கள் என்று ஜே.பி.நட்டா விமர்சனம் செய்தது கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. மேலும் திமுகவை சேர்ந்தவர்கள் பலர் திமுக தலைவர்களின் படிப்புகளை சமூல வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இளங்கலை படித்தவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிஏ, எல்எல்பி, செந்தில் குமார் எம்பி டாக்டர், அமைச்சர் பொன்முடி வரலாற்றில் எம்ஏ, அமைச்சர் பிடிஆர் 4 டிகிரி மற்றும் பிஎச்டி படித்தவர்.

இதையும் படிங்க: வகுப்பறைகளை "கட்" அடித்து இருக்கிறேன்... ஆனால் அந்த தப்பை பண்ணது இல்ல: பிடிஆர்.

இந்த நிலையில் ஜே.பி.நட்டாவின் கருத்து குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில், 2 நாடுகளில் 3 பல்கலைகழகங்களில் 4 வெவ்வேறு படிப்புகளில் சர்வதேச தரத்தில் பல தேர்வுகளை எழுதி 4 பட்டங்கள் பெற்ற எனக்கு கல்வி தகுதி இல்லை என ஜே.பி.நட்டா கூறியுள்ளார். ஒரு வேலை பிரதமர் மோடி படித்த Entire Political Science படிப்பில் பட்டம் பெற்றிருந்தால் படித்தவர் என சொல்லியிருப்பார் என்று பதிலடி கொடுத்துள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios